கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் பிரசாந்த், டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தார். சென்னையில் வீட்டு வேலை செய்து வரும் தனது தாயைச் சந்திக்கச் செல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்ட அவர், திடீரென மாயமானார். அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தாயையும் போய்ச் சேரவில்லை என்பதால் உறவினர்கள் காவல்துறையில் புகாரளித்தனர்.
போலீசார் பிரசாந்தின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, அவரது நண்பர்களான தேவராசு மற்றும் தினேஷ் ஆகியோர் மீது சந்தேகம் எழுந்தது. அவர்களைப் பிடித்து விசாரித்ததில், தேவராசுவின் மனைவியுடன் பிரசாந்துக்கு பழக்கம் இருந்தது தெரியவந்தது. சென்னைக்கு வந்த பிரசாந்த், தேவராசுவின் மனைவியுடன் வெளியே சென்று தனிமையில் இருந்ததை அறிந்த தேவராசு கடும் கோபமடைந்துள்ளார்.
இதன் காரணமாக பிரசாந்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்த தேவராசு, தனது நண்பர் தினேஷுடன் இணைந்து மது அருந்தலாம் எனக் கூறி அவரை பழவேற்காடு கடற்கரைப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து பீர் பாட்டிலால் பிரசாந்தின் கழுத்தில் குத்திக் கொலை செய்து, உடலை மணலில் புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், தேவராசு மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…