தெலங்கானா மாநிலம் ஜகித்தியால் மாவட்டத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமையன்று குடிபோதையில் வந்த நபர் ஒருவர் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், சாலையில் வந்த அரசுப் பேருந்தை நடுவழியில் மறித்து நின்று டிரைவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பேருந்து நட்டநடு சாலையில் நிறுத்தப்பட்டதால், அவருக்குப் பின்னால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபரின் மனைவி, அவரைச் சமாதானப்படுத்திச் சாலையின் ஓரமாக அழைத்துச் செல்ல முயன்றுள்ளார்.
ஆனால், ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அந்த குடிகார நபர், தடுக்க வந்த தனது சொந்த மனைவியையே நடுரோட்டில் வைத்துச் சரமாரியாகக் குத்தித் தாக்கியுள்ளார். இந்த கொடூரமானச் சம்பவம் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…
கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…