சண்டிகர் பகுதியைச் சேர்ந்த மோனு என்ற ஆட்டோ ஓட்டுநர், கோமல் என்ற பெண்ணை 8 ஆண்டுகள் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், வீட்டில் டியூஷன் எடுத்து வந்த கோமலுக்கு 20 வயது மாணவன் சன்னி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுத் தகாத உறவாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவருக்குத் தெரியவர, பழக்கத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், கோமல் அதற்கு மறுப்புத் தெரிவித்ததால் இருவீட்டார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அந்தப் பஞ்சாயத்திலும், தன் கணவன் விவாகரத்து செய்தாலும் பரவாயில்லை அந்த மாணவனை விட்டுப் பிரிய முடியாது என கோமல் உறுதியாகக் கூறிவிட்டு மகளுடன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மோனு வீட்டில் தனியாக இருந்தபோது உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவம் குறித்து மோனுவின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் கோமல் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதுரைசலூர் பகுதியில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருபவர் பிரகாஷ். இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த…
திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தில், கிணறு தோண்டும் பணியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.…
26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், செப்டம்பர் 30, 2000 அன்று, இரண்டாவது இந்திஃபாடா எழுச்சியின் போது, 12 வயது…
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகேயுள்ள மேனோன்பாறை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜான் குமார் மற்றும் நிவேத்யா தம்பதியினருக்கு,…
ரவீந்திர பாரதியில் அமைந்துள்ள கலாச்சாரத் துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணராவ் அவர்களின் அலுவலகம் முன்பாக, கலைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…
டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியான விபா என்பவரை, கம்போடியாவைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று…