“ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவி…” அச்சத்தில் தூக்கில் தொங்கிய கணவர்….! நடந்தது என்ன…? பரபரப்பு பின்னணி…!!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவரது மனைவி ஷீலா. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அப்பகுதியில் இருக்கும் வெல்டிங் கடையில் சரண்ராஜ் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஷீலா பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார். நேற்று காலை சரண்ராஜ் ஷீலாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சரண்ராஜ் கத்தியால் ஷீலாவின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார்.

பின்னர் அவர் இறந்து விட்டதாக நினைத்து அச்சத்தில் சரண்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ஷீலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரண்ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

பிரேக் ஃபெயிலியர்… லாரி மோதியதில் நொறுங்கிய 3 வாகனங்கள்… இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் புனே நர்ஹே பகுதியில் உள்ள பூம்கர் பாலத்தில், அதிவேகமாக வந்த லாரி ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால்…

13 minutes ago

“மனைவி ஆசையை விட தங்கம் பெருசா?”…. ரூ.1.65 லட்சம் ஐபோன் பரிசளித்து அசத்திய கணவரின் நெகிழ்ச்சி சம்பவம்…..!

மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…

1 மணத்தியாலம் ago

ஸ்பாவில் சிக்கிய 5 பெண்கள்… செல்போனை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கேரளாவை உலுக்கும் ரகசிய நெட்வொர்க்….!

கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…

1 மணத்தியாலம் ago

டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி….. 200 கடைகளுக்கு பூட்டு போடப்போகும் விஜய் அரசு… அலறும் அதிகாரிகள்…. சற்றுமுன் பறந்த உத்தரவு…!

தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

2 மணத்தியாலங்கள் ago

“தோற்றால் தற்கொலை பண்ணிப்பேன்னு ஸ்டாலின்கிட்ட அழுதாரா துரை வைகோ?”…. வல்லம் பஷீர் கிளப்பிய புது வெடி….!

திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…

2 மணத்தியாலங்கள் ago

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கார்டுக்கும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே கிளம்புங்க…..!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…

2 மணத்தியாலங்கள் ago