சங்கராபுரம் அருகே மாரடைப்பால் கணவன் உயிரிழந்த நிலையில் துக்கம் தாங்க முடியாமல் கணவர் வாங்கி கொடுத்த சேலையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பிரம்ம குண்டம் கிராமத்தை சேர்ந்த சிவா மற்றும் ஷர்மிளா தம்பதியினருக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சிவா விவசாய கூலி வேலை செய்து வந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் கணவரின் திடீர் உயிரிழப்பு தாங்க முடியாத துயரத்திலும் மன உளைச்சலிலும் இருந்த ஷர்மிளா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து கணவர் வாங்கி கொடுத்த சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் ஷர்மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் மனைவி அவர் வாங்கிக் கொடுத்த சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் தாயும் தந்தையும் இழந்து மூன்று குழந்தைகள் பரிதவிக்கும் சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் பாங்குரா மாவட்டம் சோனாமுகி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் தனது மனைவியைத் தலை துண்டித்துக்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் தலேகான் தாடே பகுதியில் உள்ள சிவாஜி சௌக் அருகில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம்…
திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர்…
தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நடிகர் ஆர். சரத்குமாரின் பெயர் தீவிர பரிசீலனையில் இருப்பதாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
தைவானில் உள்ள ஒரு வித்தியாசமான உணவகத்தில் கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் Aakanksha…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, உள்ளாட்சி நிர்வாகத்தைச் சீராக நடத்தும் பொருட்டு அடுத்த 6 மாதங்களுக்கு அதிகாரிகளைத்…