பொதுவாகவே வாழைப்பழம் என்பது அனைத்து காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த பழம். அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களின் பட்டியலில் வாழைப்பழம் முக்கிய இடத்தை பிடிக்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
பல நோய்களை தடுப்பதற்கும் வாழைப்பழம் பெரிதும் துணை புரிகிறது. இருந்தாலும் வாழைப்பழத்தை வீடுகளில் சேமித்து வைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்தான். மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது வாழைப்பழம் விரைவில் பழுதடைந்து விடுவதால் அதனை வீடுகளில் நீண்ட நாட்கள் பாதுகாத்து வைப்பது சவாலான விஷயம் தான். ஆனால் சில வழிமுறைகளைப் பின்பற்றினால் வாழைப்பழத்தை புதிது போல சேமித்து வைக்கலாம்.
வாழைப்பழத்தை ஹேங்கரில் மாட்டி அல்லது கயிற்றில் கட்டி காற்றோட்டமாக தொங்க விட்டால் நீண்ட நாட்களுக்கு வாழைப்பழம் அழுகாமலும் அதிகம் பழுத்து கருப்பு புள்ளிகள் வராமலும் இருக்கும். அப்படி இல்லை என்றால் நியூஸ் பேப்பரில் சுற்றியபடி வாழைப்பழத்தை வைத்தால் வேகமாக பழுக்காமல் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். வாழைப்பழத்தை மாத கணக்கில் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்றால் ஃப்ரீசரில் வைத்து பயன்படுத்தலாம்.
வாழைப்பழங்கள் அவற்றின் தட்டுக்கள் வழியாக எத்திலின் வாயுவை வெளியிடுகின்றன. அதிக வாயு வெளியிடப்படுவதால் பழம் விரைவில் பழுத்துவிடும். எனவே தட்டுகளின் முனைகளை பிளாஸ்டிக் உறைகளில் சுற்றினால் இந்த வாயு வெளியேறுவதை தடுக்கலாம் அல்லது மெதுவாக்கலாம். வாழைப்பழத்தை தோலுடன் வினிகரில் போட்டு ஊற வைத்து பிறகு எடுத்து வைத்தால் வாரக்கணக்கில் அழுகாமல் அப்படியே இருக்கும். இதில் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி வாழைப்பழத்தை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் நீங்கள் பாதுகாக்கலாம்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ், சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) அதிகாரப்பூர்வமாகப்…
மும்பையின் பய்துனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு, தற்போது தீவிர விசாரணைக்…
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தின் முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த 'கார்கி' என்ற முர்ரா இன எருமை மாடு, அதிக பால்…
புதுச்சேரி சட்டசபைக் கூட்டத்தொடரின் போது, தவெக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஒருவர், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர்…
பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள 'தகாஸ் வேலி' என்ற இடத்தில் இருக்கும் ஒரு ஆபத்தான நடைபாதை சமூக ஊடகங்களில் வைரலாகி…
தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் செய்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள்…