முதலீட்டுக்கான சிறந்த வழிகளில் தங்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய பெண்கள் பெரும்பாலும் தங்கத்தின் மீது அதிக அளவு ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக தமிழ் பெண்களை பொறுத்தவரை சேமிப்பு என்றால் அது தங்கம் வாங்குவது தான் என்று நினைத்து வருகிறார்கள். பொதுவாக குடும்ப பெண்களின் வாழ்நாள் சேமிப்பு என்பது அவர்கள் தங்கம் வாங்குவதாக தான் இருக்கும். அப்படி மதிப்புமிக்க சேமிப்பாக கருதும் தங்கத்தில் நாம் முதலீடு செய்யும்போது மிகவும் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளது. சுத்தமான தங்கமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தங்கத்தில் செம்பு, துத்தநாகம், வெள்ளி போன்றவை கலக்கப்படுகிறது. இந்த கலப்படம் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நேர்த்தியாக இருக்கும். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதை பரிசோதிக்கலாம். 24 கேரட் என்பது 100% சுத்தமான தங்கம். 18 கேரட் மற்றும் 22 கேரட் என்பது நகைகளின் பயன்படுத்தப்படும் தங்கம். இதில் மற்ற உலோகங்களும் சேர்க்கப்பட்டிருக்கும். தங்கத்தின் தூய்மையை அறிந்து கொள்ள தனி இயந்திரங்கள் காணப்படுகிறது. இந்த இயந்திரத்தில் தங்கத்தை வைத்தால் அதன் தூய்மையை காட்டும். தங்கம் சுத்தமானதா? என்பதை கண்டறிய தங்க நகை மீது சில துளி வினிகரை தெளித்துப் பார்க்க வேண்டும் .
அதில் நிறத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது போலியானது என்றும் மாற்றமில்லை என்றால் சுத்தமானது என்றும் உறுதிப்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்க நகை போட்டு அந்த நகை உடனடியாக மூழ்கினால் அது தரமான தங்கம். சிறிது நேரம் இருந்தால் அது போலியான தங்கம். முக்கியமாக தங்கத்தில் கலப்படம் இருப்பதை தவிர்க்க எப்போதும் ஐஎஸ்ஐ முத்திரை இருப்பதை பார்த்த பிறகு தான் தங்கத்தை வாங்க வேண்டும்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…