#image_title
நம்மில் பலர் வீட்டில் கலசம் வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த கலசம் எதற்காக வைக்கப்படுகிறது? கலசத்தை வைத்து வழிபாடு செய்வார்களா? எந்த கடவுளுக்கு செய்வார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? கலசம் வைத்து வழிபடும் முறைகள் பூஜிப்பது எப்படி என்பதை பற்றி இனி காண்போம்.
பொதுவாக கலச வழிபாடு செய்வது குடும்ப நலனுக்காகவும் சகல சௌபாக்கியங்களும் பெற வேண்டும் மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் குடும்ப கஷ்டங்கள் நீங்கி வறுமை நீங்கி செல்வம் பெருகவும் தனம் தானியம் பெருகவும் செய்யப்படுகிறது. நம் முன்னோர்கள் காலம் தொட்டு கலச வழிபாடு செய்து வந்திருக்கின்றனர். காலப்போக்கில் இது பலருக்கு எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறது.
மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இந்த சக்தி வாய்ந்த கலச வழிபாடு அஷ்டலட்சுமிகளையும் வீட்டிற்கு அழைத்து தெய்வ சக்தியை ஈர்க்கும் ஒரு அற்புத வழிபாட்டாகும். கலசம் என்பது மகாலட்சுமியின் அம்சமாகும். இந்த வழிபாடு செய்வதற்கு ஒரு கலசம் தேவை. வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பித்தளை, செம்பு அல்லது வெள்ளி போன்ற உலகங்களால் ஆன கலசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எதுவும் இல்லை ஆனாலும் மண் கலசத்தை பயன்படுத்தலாம். இது தவிர வேறு உலோகங்களை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் இந்த பித்தளை செம்பு வெள்ளி மண்ணாகிய கலசங்களுக்கு அதிர்வலைகளை உண்டு பண்ணி தெய்வ சக்தியை ஈர்க்கும் தன்மை இருக்கிறது.
முதலில் கலசத்தை சுத்தம் செய்து வெளிப்பகுதியில் மஞ்சள் தடவி கொள்ள வேண்டும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பின்பு கலசத்திற்குள் கங்கை தீர்த்தம் என்றால் அதை பாதி அளவு சேர்த்துக் கொள்ளலாம். மீதி அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கங்கை தீர்த்தம் இல்லாதவர்கள் பாதி பாதி அளவாக தண்ணீரையும் பன்னீரையும் கலந்து வைத்துக் கொள்ளலாம். பிறகு அதனுள் தெய்வ சக்தியையும் பணவரவையும் ஈர்க்கக்கூடிய அதீத சக்தி படைத்த பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்க்க வேண்டும். அதற்கு பிறகு ஏலக்காய் கிராம்பு மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். குங்குமம் ஒரு சிட்டிகை சேர்த்தால் போதும்.
அதற்குப் பிறகு அதில் அன்னபூரணியின் அம்சமாக இருக்கும் பச்சரிசியை கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் கலசத்திற்குள் வாசனை மிகுந்த பூக்களான சாமந்தி மல்லிகை ரோஜா முல்லை போன்ற ஏதாவது ஒரு பூவை உள்ளே போட்டு விடுங்கள். பின்னர் பூஜை அறையில் ஒரு மனை விரித்து அதில் ஒரு வாழை இலையை போட்டு வாழை இலை மீது பச்சரிசியை பரப்பி அதன் மீது கலசத்தை வைத்து குடும்பத்தில் இருக்கும் அனைவர் கைகளாலும் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை மனதார தெய்வங்களை வணங்கி கொண்டு கலசத்திற்குள் போட செய்ய வேண்டும். பின்னர் கலசத்தின் மேற்பகுதியில் மாவிலை மற்றும் மஞ்சள் தேய்த்த தேங்காய் வைக்க வேண்டும். கலசத்திற்கு சிறியதாக பூமாலை போட வேண்டும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கலசத்தில் இருக்கும் பொருட்களை மாற்றிக்கொண்டு புது பொருட்களை நிரப்பி அன்றைய தினம் மகாலட்சுமியை நினைத்து சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்து அஷ்டலஷ்மி ஸ்தோத்திரங்கள் மந்திரங்களை உச்சரிக்கலாம். வாராவாரம் வெள்ளிக்கிழமை செய்ய முடியாதவர்கள் ஒவ்வொரு மாதம் வரக்கூடிய வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் செய்து வரலாம். இந்த போல கலச வழிபாடு செய்யும்போது அனைத்துவித கஷ்டங்கள் விலகி செல்வ வளம் பெருகும் பூஜை முடிந்து கலசத்தில் எடுத்த நாணயங்களை உங்கள் பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். இதை கடைபிடிக்கும் போது நிச்சயம் பணவரவு அதிகரிக்கும் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…