#image_title
தன்னைக் கோணவாய், இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என்று விமர்சித்தவர்களுக்கு தனது அபார நம்பிக்கையாலும், துடிப்புடன் கூடிய உத்வேகத்தினாலும், விடா முயற்சியாலும் சாதித்து இன்று ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர்தான் சில்வஸ்டர் ஸ்டோலன்.
1970 களில் ஒரு இளைஞன் அமெரிக்காவின் நியூஜெர்ஸி வீதிகளில் சுற்றி திரிந்து கொண்டிருந்தவரை ஒருவர் விசாரிக்க, “சார், நான் ஒரு சினிமா நடிகன். சின்ன சின்ன கேரக்டர் எல்லாம் பண்ணியிருக்கேன். ஹீரோவாகறதுதான் என்னுடைய லட்சியம்” என்று அந்த இளைஞன் சொல்ல இவர் “என்னப்பா நீ பேசும்போதே வாய் ஒரு பக்கம் கோணிக்குது உனக்கு….இந்த நிலைமையிலே ஹீரோவாகணும்னு பேராசைப்படறியே….”என்று கேட்டவுடன்,
“இல்லே சார்…நா சமாளிச்சுருவேன்…எனக்கு நல்லா சண்டை செய்யத் தெரியும்.. Action Hero-வா வரணும்னுதான் ஆசை.. சான்ஸ் கிடைச்சா ஜெயிச்சுருவேன்..”என்று தன்மீது இருந்த அபார நம்பிக்கையுடன் அந்த இளைஞன் தன்னம்பிக்கையுடன் சொல்ல, இவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், உன்ன இப்படிப் பாக்க எனக்கு கஷ்டமாயிருக்கு என்று சொல்லி 25 டாலர் பணத்தை அந்த பெரியவர் அந்த தன்னம்பிக்கை இளைஞனுக்கு கொடுக்கிறார்.
யார் இந்த தாதா சாகேப் பால்கே… மேஜிக் மேன் to இந்திய சினிமாவின் தந்தையான வரலாறு
ஆனால் அந்த இளைஞனோ “நீங்க கொடுக்கற இந்தக் காசை நா சும்மா வாங்கிக்க மாட்டேன்…இந்த நாய் என் Friend மாதிரி.. இதை உங்களிடம் ஒப்படைக்கறேன்… பணத்தை கொடுத்துட்டு என்னோட நாயை வாங்கிக்கறேன்….”,என்று சொல்லி விட்டு பணத்தை வாங்கிக் கொள்கிறான் அந்த இளைஞன். இந்த சம்பவத்திற்குப் பிறகு, நியூயார்க்கிற்கு சென்று வாய்ப்புகளைக் கேட்டு அலைந்ததன் பயனாக தோல்விகள் கிடைக்க, அதோட சேர்த்து அனுபவங்களும் கிடைத்ததில் ஒன்று தெளிவாக புரிந்தது, நம் தோற்றத்திற்கு சினிமாவில் Hero chance கண்டிப்பாக கிடைக்காது.
#image_title
அதனால், நமக்கேற்ற வகையில் நாமே ஒரு Script செய்ய வேண்டியதுதான் என முடிவு செய்து தான் உருவாக்கும் Script-யை எந்த தயாரிப்பாளரும் புறக்கணிக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும் என தீர்மானிக்கிறான். இவ்வாறு தரமாக ஒரு ஸ்கிரிப்டை தயாரித்த அந்த இளைஞன் தான் சில்வஸ்டர் ஸ்டலோன்.
இவர் பாடல் இல்லாம கோவில் திருவிழாவே இல்லை.. ‘தோட்டுக் கடை ஓரத்திலே’ புகழ் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்
அவர் எழுதிய அந்த திரைக்கதையை படிக்க படிக்க அவருக்குள் நம்பிக்கை பிறக்கிறது.மீண்டும் சினிமா அலுவலகங்களுக்கு படையெடுக்கிறார். அப்போ,நடிக்க சான்ஸ் கேட்டு மட்டும் போனார்.இந்தத் தடவை Story cum Hero என்கிற கோரிக்கையோடு தன்னம்பிக்கையோடு இறங்குகிறார். ஒரு தயாரிப்பாளருக்கு இவர் எழுதிய கதை மிகவும் பிடித்து விட, கதையை மட்டும் கொடுத்து விடும்படியும், வேறு யாராவது பிரபல Hero-வை வைத்து படமெடுத்துக் கொள்கிறேன் என்றும் கதைக்கு மட்டும் 1,25,000 டாலர் கொடுப்பதாகவும் சொல்கிறார்.
#image_title
“இல்லே சார்….எனக்காகவே எழுதிய கதை….நா நடிச்சாதான் சரியா வரும்…ஒவ்வொரு காட்சியையும் எப்படி நடிக்கணும்கிற அளவுக்கு பயிற்சி எடுத்து இருக்கேன்…. மன்னிச்சுக்குங்க சார்..”, என்று சொல்லி விட்டு நடையைக் கட்ட அந்தத் தயாரிப்பாளரோ கதையை விட மனசில்லாமல் 3,20,000 டாலர் குடுக்கறேன்.. என்று கேட்க, ஸ்டலோன் மிகப்பிடிவாதமாக, “சார்…மறுபடியும் சொல்றேன்… என்னையை தப்பா நினைக்காதீங்க… இந்தக் கதைக்கு ஹீரோவா எனக்கு வாய்ப்பு கிடைக்கலன்னா, இந்தக் கதையைவே கிழிஞ்சு எறிஞ்சுருவேன்…”, என்று சொன்னவுடன் தயாரிப்பாளர் ஸ்டலோனை அதிர்ச்சியோடு பார்க்கிறார். பின் ஒருவழியாக சம்மதித்து திரைப்படம் எடுக்க தயாராகிறார்.
ஆனால்,ஸ்டலோனுக்கு Hero Chance கொடுப்பதால் கதையோடு சேர்த்து வெறும் 35,000 டாலர்தான் சம்பளம். இப்படித்தான் ராக்கி என்ற ஹாலிவுட் படம் உருவானது. தயாரிப்பாளர் கொடுத்த 35,000 டாலர் தனது கைக்கு வந்தவுடன் அவர் செய்த முதல் காரியம், தனக்கு தக்க சமயத்தில் உதவி செய்த அந்த பெரியவரை சந்தித்து வட்டியும் முதலுமாக 15,000டாலரை கொடுத்து தனது நண்பனான நாயை மீட்டுக் கொண்டு வருகிறார். தன்னுடைய நாயையும் செண்டிமென்ட்டாக நடிக்க வைக்கிறார்.
கடைசி பென்ச் to காக்கிச் சட்டை சிங்கம்.. தன்னம்பிக்கை நாயகன் சைலேந்திரபாபு ஐபிஎஸ்-ன் பவர் ஸ்டோரி…
ஸ்டலோனின் மீது நம்பிக்கையில்லாமல் மிகக்குறைந்த பட்ஜெட்டையே ஒதுக்குகிறார், தயாரிப்பாளர். படத்தின் மொத்த பட்ஜெட்டே ஒரு மில்லியன் டாலர்தான். நம் இந்திய மதிப்பில் ஏழு கோடி ரூபாய். இப்படி கடும்போராட்டத்திற்கு இடையில் எடுக்கப்பட்ட ராக்கி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைகிறது. படத்தின் பட்ஜட்டோ ஒரு மில்லியன் டாலர்தான். ஆனால் 1976-ல் அதிக வசூல் சாதனை புரிந்த திரைப்படமும் ராக்கிதான். பத்துப் பிரிவுகளில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டு,மூன்று பிரிவுகளில் விருதுகளையும் பெற்றுள்ளது.
#image_title
அந்த ஒரே படத்தின் மூலம் ஹாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் ஆனார், சில்வர்ஸ்டர் ஸ்டாலோன். படம் வெளியாகி 48 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ‘ராக்கிக்கு’ மவுசு குறையவேயில்லை. இவ்வாறு தன் மேல் வைத்திருந்த அபார நம்பிக்கையால் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் முயற்சியைக் கைவிடாமல் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டராக இப்படித்தான் உருவெடுத்தார் சில்வஸ்டர் ஸ்டோலன்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…