துபாயில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தை விலையை நேரடியாகப் பின்பற்றுவதால், இந்தியாவில் இருப்பதை விட சுமார் 10% குறைவாகவே விற்கப்படுகிறது. அத்துடன், தங்க நகைகளுக்கான செய் கூலி (Making Charge) இந்தியாவில் 8%–25% ஆக இருக்கும் நிலையில், துபாயில் வெறும் 2%–8% மட்டுமே உள்ளது. இதனால், மொத்தமாக நகை வாங்குபவர்கள் 20% வரை சேமிக்க முடியும்.
துபாயில் இருந்து இந்தியாவுக்குத் தங்கம் கொண்டு வருவதற்கான விதிமுறைகளை 2025 CBIC விதிமுறைகள் தெளிவாகக் கூறுகின்றன. அதன்படி, ஆண்கள் 20 கிராம் (அதிகபட்ச மதிப்பு ₹50,000) வரை வரியில்லாமல் கொண்டு வரலாம். பெண்கள் மற்றும் 15 வயதுக்குக் குறைவான குழந்தைகள் 40 கிராம் (ரூ.1 லட்சம் வரை மதிப்பு) வரை வரியில்லாமல் கொண்டு வரலாம்.
இந்த வரம்புகளை மீறி தங்கம் கொண்டு வரும் பயணிகள், குறிப்பிட்ட சதவீதம் சுங்க வரியைச் (Customs Duty) செலுத்த வேண்டும். உதாரணமாக, ஆண்கள் 20 கிராம் முதல் 50 கிராம் வரை கொண்டு வந்தால் 3% வரியும், 100 கிராமுக்கு மேல் கொண்டு வந்தால் 10% வரியும் விதிக்கப்படும். மேலும், ஒருவர் துபாயில் குறைந்தது 6 மாதங்கள் தங்கியிருந்தால், அதிகபட்சம் 1 கிலோ வரை தங்கம் கொண்டு வர அனுமதி உண்டு; ஆனால் அதற்கான வரியைச் செலுத்துவது கட்டாயம்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…