#image_title
அனைவருக்கும் அத்தியாவசிய ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பது கட்டாயம். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) விதிகளின்படி, ஆதார் அட்டையில் உங்கள் பெயரை மொத்தமாக இரண்டு முறை மட்டுமே மாற்ற அனுமதிக்கப்படுகிறது. எழுத்துப் பிழைகளைச் சரிசெய்வது, பெயரின் வரிசையை மாற்றுவது அல்லது திருமணத்திற்குப் பிறகு பெயரைப் புதுப்பிப்பது போன்ற சிறிய திருத்தங்களை இந்த வரம்புக்குள் செய்யலாம். இந்த மாற்றத்திற்கு ₹50 கட்டணம் செலுத்த வேண்டும்.
மூன்றாவது முறையாக நீங்கள் பெயரை மாற்ற விரும்பினால், அதற்குச் சிறப்பு அனுமதி தேவைப்படும். மேலும், மாற்றத்திற்கான சரியான காரணத்தையும் நிரூபிக்க வேண்டும். ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் செய்ய நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை; இதை வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் செய்யலாம்.
UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ‘மை ஆதார்’ (My Aadhaar) பிரிவில் உள்ள ‘விவரங்களைப் புதுப்பித்தல்’ பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு உங்கள் ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-யைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதன்பின், ‘பெயர்’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துப் புதிய பெயரைப் பதிவிட்டு, அதற்கான பாஸ்போர்ட், பான் கார்டு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற சான்று போன்ற ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாகக் கிடைக்கும் URN எண்ணைப் பயன்படுத்தி உங்கள் நிலையை நீங்கள் கண்காணிக்கலாம்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…