இன்றைய காலத்தில் அசைவ பிரியர்கள் அதிகமாக சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்றுதான் சிக்கன். அதிலும் பெரும்பாலானவர்கள் நாட்டு கோழியை விரும்பாமல் பிராய்லர் கோழியை விரும்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கடைக்குச் சென்று இறைச்சி வாங்குவதற்கு எரிச்சல் கொண்டு ஆன்லைனில் அமர்ந்த இடத்திலேயே ஆர்டர் போடுகிறார்கள். அவ்வாறு ஆர்டர் போட்டு வாங்கும் சிக்கனையும் உடனே சமைக்காமல் அதனை பிரிட்ஜில் சில நாட்களுக்கு சேமித்து வைத்து சமைக்கின்றனர். இவ்வாறு சேமித்து வைக்கும் சிக்கலால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும் எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைத்திருக்கலாம் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் வாங்கும் சிக்கனை இரண்டு நாட்கள் பிரிட்ஜில் சேமித்து வைக்கலாம். அதுவும் ஃப்ரீசரில் தான் வைக்க வேண்டும். முழு சிக்கன் என்றால் பிரீசரில் 9 முதல் 12 மாதங்கள் வரை இருக்கும். அதுவே வெட்டப்பட்ட சிக்கன் என்றால் 6 முதல் 8 மாதங்கள் வரை நன்றாக இருக்கும். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் வெளியே எடுக்கக்கூடாது. எனவே வெட்டப்பட்ட பேக் செய்யப்பட்ட சிக்கன் என்றால் 48 மணி நேரம் கூட வைக்கக்கூடாது.
சிக்கனை சேமிப்பதற்கு ஃப்ரிட்ஜில் தனியாக ஒரு இடம் வைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே சிக்கனை காற்று புகாதபடியான பாத்திரத்தில் போட்டு சேமித்து வைக்க வேண்டும். ஏனென்றால் காற்று புகுந்தால் பாக்டீரியா தொற்று ஏற்படும். இது மற்ற காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் தயிர் ஆகியவற்றில் பரவி விடும். ஃப்ரிட்ஜில் வைத்த சிக்கனை மீண்டும் பயன்படுத்தும் போது கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும். மேலும் வெட்டுவதற்கு பயன்படுத்தும் கத்தி, மரப்பலகை மற்றும் பாத்திரம் கழுவும் தொட்டி ஆகியவற்றையும் சுத்தம் செய்து விட வேண்டும்.
ஏனென்றால் இதிலும் பாக்டீரியா பரவும் அபாயம் உள்ளது. பிரிட்ஜில் இருந்து எடுத்ததும் சமைத்து விட வேண்டும். ஓரிரு மணி நேரம் வைத்தால் சிக்கன் கெட்டுப் போய்விடும். அதேசமயம் ஃப்ரிட்ஜில் உள்ள சிக்கனில் துர்நாற்றம், சாம்பல் அல்லது மஞ்சள் நிறமாக மாறி இருந்தால் உடனே அதனை அப்புறப்படுத்தி விட வேண்டும். ஃப்ரிட்ஜில் சேமிக்கும் இறைச்சியை பிளாஸ்டிக் டப்பாவில் சேமித்தால் ஆபத்து. ஏனென்றால் இவை ஈரப்பதத்தை தக்கவைத்து பாக்டீரியா ஏற்பட காரணமாகும். அதனால் சிக்கனை கண்ணாடி டப்பா அல்லது ஸ்டீல் பாத்திரம் ஆகியவற்றில் சேமித்து வைப்பது தான் நல்லது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…