“அடேய், அந்த சாதிக்காரனா நீ”… சிறுவனை ஓரின சேர்க்கைக்கு அழைத்து தினம் தினம் சித்திரவதை… வீடியோவை பார்த்து கதறிய பெற்றோர்…!

Spread the love

ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு சமூக நீதி மாணவர் விடுதியில் மதுரையை சேர்ந்த முனியப்பன் என்பவருடைய மகன் ஹரி பிரசாந்த் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் விடுதியில் தங்கிய நாள் முதல் அந்த அறையில் தங்கி படி 9,10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் சிறுவனை தூங்கவிடாமல் முகத்தில் தண்ணீர் ஊற்றி தொந்தரவு செய்வது குடித்துவிட்டு ஓரினசேர்க்கைக்கு அழைப்பது என தொந்தரவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மாணவனை ஜாதி பெயரைச் சொல்லி அவரை கொடுமைப்படுத்துவது அவர்களின் சொந்த வேலைகளுக்கு சிறுவனை பயன்படுத்துவது என தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.

இதனை பலமுறை மாணவர் விடுதியின் வார்டனிடம் சொல்லியும் அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் மாணவனை கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு தாக்கிய சக மாணவர்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனைப் பார்த்த மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடனே அதிர்ச்சி அடைந்து இது குறித்து மாணவனிடம் கேட்டபோது மாணவன் நடந்ததை கூறியுள்ளான். உடனே பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

மேலும் சக மாணவர்கள் தன்னை படிக்க விடாமல் தொந்தரவு அளித்து ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாகவும், தன்னை எப்போதெல்லாம் தேவைப்படுகிறது அப்போதெல்லாம் தாக்கி அடித்ததாகவும், இதனால் நிம்மதி இல்லாமல் இருந்ததாகவும் சிறுவன் கண்ணீரோடு கூறியுள்ளான். தற்போது இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

2 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

2 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

2 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

2 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

2 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

2 மணத்தியாலங்கள் ago