ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் நடந்துள்ள கோர விபத்து ஒன்று சமூக வலைதளங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது. நாத்வாரா பகுதி பதார்தா நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ஒரு மஹிந்திரா தார் கார், கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்து குறித்த ஷாக்கிங் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. வாகனம் பறந்து வந்து மோதும் அந்த திகிலூட்டும் தருணம் இணையத்தில் வைரலாகி வருவதோடு, வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமே இந்த விபட்டுக்கு முக்கியக் காரணம் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
https://twitter.com/TV9Telugu/status/2109535567172256017/video/1
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நபர் எந்தவிதப் பெரிய காயங்களும் இன்றி உயிர் தப்பினார். விபத்து நடந்தவுடன் அப்பகுதி மக்களும் உள்ளூர் பொதுமக்களும் உடனடியாக திரண்டு வந்து போக்குவரத்தைச் சீரமைத்தனர். மேலும், நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் தார் கார்களின் ஓவர் ஸ்பீடு மற்றும் போக்குவரத்து விதமீறல்கள் குறித்து பொதுமக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…