பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டம் மதுபன் காவல் எல்லைக்குட்பட்ட பஞ்சாரியா சாரே பகுதியில், அதிகாலை வேளையில் துர்கா பூஜை வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த புதுமணத் தம்பதியை எட்டு பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. கணவரைக் கடுமையாகத் தாக்கி அச்சுறுத்திய அக்கும்பல், அவரிடமிருந்த நகை, பணத்தைப் பறித்ததோடு ஆன்லைன் மூலமாக மூவாயிரம் ரூபாயையும் கட்டாயப்படுத்தி மாற்றச் செய்துள்ளது. பின்னர் அப்பெண்ணை அருகிலுள்ள மாந்தோப்பிற்குள் இழுத்துச் சென்று கணவரின் கண்முன்னே கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளது.
இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மதுபன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விரைந்து களமிறங்கிய காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சில மணி நேரங்களிலேயே சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் சுற்றிவளைத்துக் கைது செய்தது. பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில் கைதானவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஹைதராபாத்தில் பெண்களின் பெயரில் போலி சோஷியல் மீடியா கணக்குகளை உருவாக்கி, ஆண்களை வசீகரித்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று…
கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் நள்ளிரவில் உணவருந்திவிட்டுத் திரும்பிய பிரிட்டிஷ் சுற்றுலாப் பெண் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவரது…
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பணி முடிந்து வீடு திரும்பியபோது மாயமான உத்திரா என்ற 26 வயது இளம் செவிலியர்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில், இரண்டு பெண்கள் க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்துவது…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மனைவி உடல்நலக் குறைவு காரணமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
டெல்லி ஜாமா மஸ்ஜித் மெட்ரோ நிலையத்தில், சாமான்களைச் சோதனை செய்யும் ஸ்கேனரில் சந்தேகத்திற்குரிய பொருள் சிக்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட…