ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், கருணை அடிப்படையிலான அரசு வேலை மற்றும் குடும்ப சொத்தை அபகரிப்பதற்காக, 23 வயது இளம்பெண் ஒருவர் தனது சொந்த தாயையே கூலிப்படை வைத்து படுகொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜெய்ப்பூரின் பிரதாப் நகரைச் சேர்ந்த நீரஜ் சர்மா (45) என்ற பெண்மணி, கடந்த ஜூலை 3-ஆம் தேதி அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் மோதி உயிரிழந்தார். முதலில் இது சாதாரண சாலை விபத்து என்று கருதப்பட்ட நிலையில், நீரஜ் சர்மாவின் சகோதரர் ராகேஷ் அளித்த சந்தேகத்தின் பேரிலான புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில், இது விபத்து அல்ல; திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை என்பது அம்பலமானது.
விசாரணையில், நீரஜ் சர்மாவின் கணவர் கடந்த ஆண்டு மறைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் இளநிலை எழுத்தராக நீரஜ் சர்மாவுக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைத்துள்ளது. இந்த வேலையையும் சொத்தையும் கைப்பற்ற நினைத்த அவரது மகள் ஆயுஷி, தாயுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் பேராசை காரணமாக, தனது மாமா மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து தாயைக் கொலை செய்ய ஆயுஷி சதித்திட்டம் தீட்டியுள்ளார். இதற்காகக் கூலிப்படையை ஏவி, விபத்து போல சித்தரித்துக் கொடூரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தற்பொழுது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மகள் ஆயுஷி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தேடி வரும் நிலையில், வேலைக்காகப் பெற்ற தாயையே கொன்ற இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த விவாகரத்து வழக்கில், மனைவியின் மீதான கூடுதல் கணவரின் தாக்குதல் மற்றும் திருமணத்திற்குப் புறம்பான உறவு…
பெங்களூருவில் ராபிடோ பைக்குகளில் பயணிப்பவர்கள் பாதுகாப்புக் குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் முக்கியப்…
விஜயாப்பூரில் காலையில் நடைபயிற்சியின் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான நபர் விபத்து மரணம் அல்ல, மாறாக திட்டமிடப்பட்ட…
ராஜஸ்தானின் டீக் மாவட்டத்தில் உள்ள ஒரு வயலில் 13 வயது இரட்டைக் குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…