டெல்லியில் இறங்கி அடித்த முதலமைச்சர் விஜய்.. பிரதமர் மோடியிடம் கொடுத்த ‘மெகா டிமாண்ட்’ லிஸ்ட் இதோ.. அதிர்ந்த அரசியல் களம்..!!

Spread the love

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பங்கேற்று, மாநில வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி உரிமைகள் குறித்துப் பேசினார். குறிப்பாக, தமிழ்நாட்டின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ஜி.எஸ்.டி. சாலையின் செங்கல்பட்டு – திருச்சி பகுதி, திருச்சி – கரூர் பகுதி மற்றும் கரூர் – கோயம்புத்தூர் பகுதியை ஆறு வழிச்சாலைகளாக மேம்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரினார். மேலும், மாதவரம் – சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம் அமைக்கவும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கவும் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகங்களுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினார்.

மாநிலத்தின் டிஜிட்டல் மற்றும் குடிநீர் கட்டமைப்பு குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் ‘பாரத்நெட்’ இரண்டாம் கட்டத் திட்டம் 97% நிறைவடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் தடையற்ற இணைய இணைப்பை உறுதி செய்ய மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, ரூ. 2,283.40 கோடி மதிப்பீட்டிலான ஒகேனக்கல் மூன்றாம் கட்டக் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் உறுதியளிக்கப்பட்ட நிதி உதவியை விரைந்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். நிதிப் பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் உரிய அங்கீகாரத்தைப் பெற வேண்டுமே தவிர, எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்வி மற்றும் கலாச்சார உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், ‘ஒருங்கிணைந்த கல்வி’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ரூ. 3,284 கோடி நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார். புதிய கல்விக் கொள்கையையோ அல்லது மும்மொழிக் கொள்கையையோ திணிக்காமல், எவ்வித நிபந்தனையுமின்றி இந்த நிதியை வழங்க வேண்டும் என அவர் திட்டவட்டமாக வலியுறுத்தினார். இறுதியாக, நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களின் அடையாளமாக விளங்கும் தொன்மையான திருக்குறளை ‘தேசிய இலக்கியமாக’ அறிவிக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்த முதலமைச்சர் விஜய், “மாநிலங்கள் வலுப்பெறும்போதுதான் இந்தியாவும் வலிமை பெறுகிறது” எனத் தனது உரையை நிறைவு செய்தார்.

Muthu Mani

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

3 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

4 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

4 மணத்தியாலங்கள் ago