கேட்பதற்கே நெஞ்சை உறைய வைக்கும் இந்தச் சோகக் கதை, பரந்து விரிந்த சஹாரா பாலைவனத்தின் சுட்டெரிக்கும் வெயிலில் அரங்கேறியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சஹாரா பாலைவனப் பகுதியில், துளி தண்ணீருக்குக் கூட வழியில்லாமல் 49 மனித உயிர்கள் துடிதுடித்துப் பரிதாபமாகத் தங்களின் மூச்சை நிறுத்தியுள்ளனர். மாலி நாட்டில் நடைபெற்ற ஒரு இஸ்லாமியப் பெருநாள் மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, மகிழ்ச்சியோடு தங்களின் சொந்த தாயகம் நோக்கி லாரி ஒன்றில் பயணிகள் திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் இந்த நெஞ்சை உலுக்கும் கொடூரத் துயரம் நிகழ்ந்து ஒட்டுமொத்த உலகையுமே உறைந்து போகச் செய்திருக்கிறது.
அகாடெஸ் ஆளுநர் அலுவலகம் கொடுத்துள்ள தகவலின்படி, இவர்கள் அனைவரும் நைஜர் மற்றும் அல்ஜீரியா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அசமாக்காவுக்கு மேற்கே 80 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகப் பெருந்துயரம் நிகழ்ந்தது. அந்த வெறிச்சோடிய பாலைவன மணலுக்குள் லாரி திடீரெனப் பழுதடைந்து நடுவழியில் சிக்கிக்கொண்டது. டிரைவரும் பயணிகளும் எவ்வளவு போராடியும் அந்த பழுதை சீரமைக்க முடியவில்லை. வாகனத்தைச் சீரமைக்க முடியாத அவலம் ஒருபுறம், சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறிச்சோடிக்கிடக்கும் பாலைவனம் மறுபுறம் என அவர்கள் வசமாக மாட்டிக்கொண்டனர்.
நாட்கள் நகர நகர, அவர்கள் கையில் வைத்திருந்த அத்தியாவசிய உணவும், குடிநீர் கையிருப்பும் முழுமையாகத் தீர்ந்துபோயிருக்கிறது. கொடூரமான வெப்பம் ஒருபுறம் வாட்ட, துளி நீரின்றி தவித்த அந்தப் பயணிகள் மாற்று உதவியும் கிடைக்காமல் அங்கே தவித்துள்ளனர். கத்தரி வெயிலின் தாகத்தாலும், கடும் வெப்பத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் சக்தியை இழந்து, 49 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால், இந்த மரணப் போராட்டத்திலும் ஒரு மனிதாபிமான அதிசயமும், நெஞ்சை நெகிழ வைக்கும் துணிச்சலும் அரங்கேறியுள்ளது. ஆம், இந்தக் குழுவில் இருந்த இரண்டு பயணிகள் மட்டும் எப்படியாவது தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற வெறியோடு சஹாராவின் பாலைவன மணலில் சுமார் 50 கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து சென்று, இறுதியில் ஒரு நீர்நிலையைக் கண்டுபிடித்துத் தங்களின் உயிரைக் காத்துக்கொண்டனர்.
அவர்கள் எப்படியோ அசமாக்கா பகுதியை அடைந்து கொடுத்த தகவலின் பேரிலேயே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்து கிடந்த 49 பேரின் உடல்களையும் மீட்டு நைஜர் நிர்வாகத்தின் சார்பில் அங்கேயே ஒரே பொதுக் கல்லறையில் அடக்கம் செய்தனர். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கிப் பயணிக்கும் புலம்பெயர்ந்தோரின் மிக முக்கியமான மரவழித்தடமாக இந்தச் சஹாரா பாலைவனப் பகுதி கருதப்படுகிறது. கடுமையான வெப்பம், மனித நடமாட்டமில்லாத சூழல், நீர் பற்றாக்குறை காரணமாக ஆண்டுதோறும் எண்ணற்ற உயிர்கள் இப்பகுதியில் பலியாகி வரும் நிலையில், சொந்த ஊருக்குச் செல்ல நினைத்த 49 பயணிகளுக்குப் பாலைவனமே கல்லறையான இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சி அமைந்துள்ள நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக…
தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான மோதல் தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…
தமிழ்நாடு பாஜகவின் முகமாக அறியப்பட்ட அண்ணாமலை, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக விலகியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து…
மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த…