“புத்தகம் வாங்கலன்னா உங்க குழந்தைக்கு ஹோம் ஒர்க் கிடையாது!”…பெற்றோரை மிரட்டிய தலைமையாசிரியர்… கொதிக்கும் இணையவாசிகள்… வைரல் வீடியோ…!!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள சன்பீம் பள்ளியில், கூடுதல் நோட்டுப் புத்தகங்களை வாங்குமாறு பெற்றோரை நிர்வாகம் வற்புறுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பள்ளியில் யுகேஜி பயிலும் அலிஷா என்ற மாணவியின் தாய் நீலம் வர்மா, ஏற்கனவே தேவையான பாடப் புத்தகங்களை வாங்கிவிட்டதாகக் கூறி, கூடுதல் புத்தகங்கள் வாங்க கால அவகாசம் கேட்டுள்ளார். ஆனால், பள்ளி முதல்வர் மம்தா மிஸ்ரா மற்றவர்கள் முன்னிலையில் நீலம் வர்மாவிடம் கோபமாக வாக்குவாதம் செய்து கத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து விளக்கிய நீலம் வர்மா, பள்ளி நிர்வாகம் ரூ.1,200 மதிப்புள்ள கூடுதல் நோட்டுப் புத்தகங்களை உடனடியாக வாங்குமாறு வற்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். தன்னிடம் ஏற்கனவே புத்தகங்கள் இருந்தும், பள்ளியில் இருந்துதான் வாங்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் நோட்டுப் புத்தகங்கள் இல்லாத காரணத்தால் சிறுமி அலிஷா வீட்டுப்பாடம் செய்ய முடியாமல் போன நிலையில், இது குறித்துப் பேசச் சென்ற பெற்றோரை பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் நிர்வாகத்தினர் தரக்குறைவாக நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளிகள் தங்களுக்குத் தேவையான வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள இதுபோன்ற கட்டாய விற்பனையில் ஈடுபடுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கை குறைபாட்டைப் பயன்படுத்தி, தனியார் பள்ளிகள் பெற்றோர்களின் கட்டாயச் சூழலைச் சுரண்டுவதாக இணையவாசிகள் விவாதித்து வருகின்றனர். கல்வி நிறுவனங்கள் லாப நோக்கோடும், மிரட்டும் தொனியிலும் செயல்படுவது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதால், கல்வித்துறை இதில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Muthu Mani

Recent Posts

BIG BREAKING: ஆளுநரை மீண்டும் சந்திக்கிறார் விஜய்… அடுத்தடுத்து பரபரப்பில் தமிழகம்..!!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மீண்டும்…

4 minutes ago

“எங்க தலைவர் மீண்டும் வருவாரு” திமுக தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல்… மொட்டையடித்துக் கொண்ட தொண்டர்கள்..!!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் திமுக பின்னடைவைச் சந்தித்ததுடன், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே தோல்வியைத்…

8 minutes ago

“ஒரு நிமிட அவசரம்.. இவ்வளவு பெரிய விலையா?… தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ”…!!!

பக்தியார்பூர் இரயில் நிலையத்தில் நடந்த இந்தக் கொடூரமான விபத்து நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. டெல்லியில் இருந்து மால்டா நோக்கிச்…

9 minutes ago

புதிய தேர்தல் நடத்துவதே நல்லது… TVK பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெறும்… ஸ்ரீதர் வேம்பு அதிரடி.!!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நிலவும் அரசியல் இழுபறிகள் குறித்து சோஹோ…

11 minutes ago

ஆக்ரா மருத்துவமனையின் அவலம்!… 5 வயது சிறுவனை பதம் பார்த்த ‘இன்பெக்டட்’ ஊசிகள்… கதறும் பெற்றோர்… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!!!

ஆக்ராவில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றபோது, அங்கு அஜாக்கிரதையாகத் திறந்து…

22 minutes ago

நம்பிக்கைத் துரோகம் செய்யும் புதின்.? போர்நிறுத்தம் அறிவித்த சில மணிநேரங்களில் நடந்த பகீர் சம்பவம்… அமைதி பேச்சுவார்த்தை வெறும் நாடகம் ..!!!

இரண்டாம் உலகப் போர் வெற்றி தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ரஷ்யா போர்நிறுத்தத்திற்குத் தயாராகி வருவதாக அறிவித்திருந்த நிலையில், உக்ரைன் மீது…

37 minutes ago