கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்வாக அளவில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது. 2009 முதல் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்ட ஸ்டீபன் பிளேமிங்கிற்குப் பதிலாக தற்போது ஜாகீர் கான் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முடிவின்படி மோஹித் சர்மா பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரர்களான சுரேஷ் ரெய்னா அல்லது அம்பத்தி ராயுடு ஆகியோரில் ஒருவரை புதிய பேட்டிங் பயிற்சியாளராக கொண்டுவரவும் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
அணித் தேர்வில் முழு சுதந்திரம் பெற்றுள்ள ஜாகீர் கான், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மினி ஏலத்திற்கு முன்பாக 11 வீரர்களை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளார். இதில் மேத்யூ ஷார்ட், ஜாக் போல்க்ஸ், மேட் ஹென்ட்ரி, ஸ்பென்சர் ஜான்சன் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்களும், குல்தீப் யாதவ், ராகுல் சாஹர் உள்ளிட்ட உள்ளூர் வீரர்களும் அடங்குவர். இப்படி அணியில் உள்ள தேவையற்ற வீரர்களை வெளியேற்றுவதன் மூலம் கிடைக்கும் கூடுதல் நிதியைக் கொண்டு, வரவிருக்கும் ஏலத்தில் இங்கிலாந்து வீரர்களான ஹாரி புரூக் மற்றும் ஜோஷ் டங்க் ஆகியோரை வாங்குவதற்கு வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகமாக இருப்பதால், அங்கு பெஞ்சில் அமர்ந்திருக்கும் சாய் கிஷோரை டிரேடிங் முறையில் சிஎஸ்கேவிற்கு கொண்டுவர தீவிர முயற்சி நடந்து வருகிறது. அதற்காக பணமோ அல்லது சர்பராஸ் கானையோ குஜராத் அணிக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அணியில் இருந்து தற்போது விடுவிக்கப்படும் விக்கெட் கீப்பரான பிரசாந்த் வீரை, ஏலத்தில் வேறு எந்த அணியும் எடுக்க முன்வராத பட்சத்தில், அவரை மீண்டும் குறைந்த விலைக்கு ஒப்பந்தம் செய்யவும் சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…
திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…
சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…
பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…