#image_title
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்தியாவில் மிக முக்கியமான நடிகர்களுள் ஒருவர் ரஜினிகாந்த். இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் என்பதாகும். ஆரம்பத்தில் பெங்களூர் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்த ரஜினிகாந்த் பின்னர் நடிகர் ஆகி தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.
நடிகராக வேண்டும் என்று ஆவலுடன் சென்னைக்கு வந்த ரஜினிகாந்த முறையாக சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்பை பயின்றார். 1975ஆம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திராத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1977 ஆம் ஆண்டு மூன்று முடிச்சு 16 வயதினிலே போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து 1980கள் 90கள் 2000 காலகட்டம் வரை புகழின் உச்சியில் இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிக்காத கதாபாத்திரங்கள் வெற்றி படங்கள் இல்லை என்ற அளவுக்கு பிரபலமானார்.
கிட்டத்தட்ட 56 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கு 75 வயதை நெருங்கும் போதும் உற்சாகமாக இன்றளவும் அன்று போல் இன்று வரை ஹீரோவாக வெற்றி பெற்ற நடிகராக வசூல் சாதனை படைக்கும் நாயனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இவர் தீவிரமாக ஆன்மீகத்தை பின்பற்றுபவர் மற்றும் ஹெல்த் கான்சியஸ் கொண்ட மனிதர் ஆவார் மற்றும் அபாரமாக பேசக் கூடியவர் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் இன்று தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது நண்பர் ராஜ பகதூர் தான். ஆரம்பத்தில் ரஜினிகாந்த் கண்டக்டராக இருந்தபோது இவரது attitude ஸ்டைலை பார்த்துவிட்டு இவரது நண்பர் ராஜ் பகதூர் தான் இவரை சினிமாவில் நடிக்கும் படி அறிவுரை கூறி சென்னைக்கு திரைப்பட கல்லூரியில் சேர்வதற்கு அனுப்பி வைத்தார்.
அதோடு அவர் நிறுத்தவில்லை ரஜினிகாந்த் கல்லூரியில் படித்து முடிக்கும் வரை மாதம் மாதம் பல உதவி செய்திருக்கிறார் ராஜ் பகதூர். அவர் கண்டக்டர் வேலை பார்த்து அவருக்கு கிடைக்கும் 320 ரூபாய் சம்பளத்தில் தானக்காக 200 ரூபாய் மட்டும் எடுத்து வைத்துவிட்டு இரண்டு வருட காலமாக ரஜினிகாந்துக்கு மாதாமாதம் 120 ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறார் ராஜபகதூர். அவர் கட்டாயப்படுத்தி ரஜினிகாந்தை சினிமாவில் சேரும்படி அனுப்பி வைக்கவில்லை என்றால் அவர் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ஆகி இருக்க மாட்டார். இப்படி ஒரு உதவியை செய்த நண்பர் கிடைப்பது வரம் தான்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…