‘பாண்டவர் இல்லம்’ சீரியல் நடிகை பாப்ரி கோஷ் அவர்களின் கணவரை பார்த்துளீர்களா.. வெளியான குடும்ப புகைப்படங்கள்..

By Samrin on ஆனி 30, 2023

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரை சீரியல்களுக்கு என்று   மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என  ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

அந்த வகையில் சன் டிவி சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று ‘பாண்டவர் இல்லம்’. இந்த சீரியலில் பாப்ரி கோஷ், ஆர்த்தி சுபாஷ், கிருத்திகா அண்ணாமலை, நரேஷ் ஈஸ்வர்,  நேசன் நெப்போலியன், சுரேந்தர் ராஜ், முகமது அப்சார், அனு சுலாஷ், அனிஷா போன்ற பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.

   

 

இந்த சீரியலில் கயல்வழி என்ற கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை பாப்ரி கோஷ்.  இவர் கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்டவர். 2009 ஆம் ஆண்டு வெளியான பெங்காலி படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து தெலுங்கு, அதன் பின்னர் தமிழிலும் அறிமுகமானார். 2015-ல் வெளியான ’டூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்தின் மூலமாக  தமிழ்  சீனிமாவில் அறிமுகமானார்.இவர் தமிழில் பைரவா, சக்கப் போடு போடு ராஜா,  சர்க்கார்,  விசுவாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகை  பாப்ரி கோஷ் நாயகி, பூவே உனக்காக, சித்தி 2, மகராசி , வானத்தை போல, அருவி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். நடிகை பாப்ரி கோஷ்  சந்தீப் என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 352K followers  வைத்துள்ளார். தற்போது இவரின் குடும்ப  புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.