ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையைத் தரும் வகையில் ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ரகசிய ஒப்புதலை வழங்கியிருப்பதாக சவூதி அரேபிய ஊடகமான ‘அல் அரேபியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃபிடம் இந்த ரகசியத் தகவலைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு சாத்தியமான ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகவும், இதன் மூலம் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள நிலையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை ஏதேனும் ஒரு “முக்கிய நபர்” மூலம் நடந்து வருவதாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார், அவர் மொஜ்தபா காமேனியாக இருக்கலாம் என்று தற்போது கருதப்படுகிறது.
இந்நிலையில் ஈரான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக இந்தச் செய்திகள் மறுக்கப்பட்டாலும், ரகசியத் தொடர்புகள் நீடிப்பதாகவே சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், அது மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதுடன், உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் பொருளாதாரத்தில் பெரும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…