Categories: சினிமா

தயங்கிய இசையமைப்பாளர்.. பாடலின் வரியை கேட்டுவிட்டு நான் தான் பாடுவேன் என அடம் பிடித்த ஜி.வி பிரகாஷ்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் ஏ.ஆர் ரகுமான், ஜிவி பிரகாஷ், அனிருத், யுவன் சங்கர் ராஜா, இமான் ஆகியோர் தங்களது இசையால் ரசிகர்களை கட்டி போட்டுள்ளனர். அந்த வரிசையில் என்.ஆர் ரகுநந்தனும் பாடலால் ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வைத்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மூலமாக என்.ஆர் ரகுநந்தன் இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அடுத்தடுத்து கிருஷ்ணவேணி பாஞ்சாலை, சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை, மதயானை கூட்டம், மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட படங்களுக்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ரகுநந்தன் அளித்த பேட்டியில் கூறியதாவது, எனது மூன்றாவது படம் சுந்தரபாண்டியன். இந்த படத்தின் இயக்குனர் பிரபாகரனுக்கு தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நான் இசை அமைத்த அனைத்து பாடல்களும் மிகவும் பிடிக்கும்.

சுந்தரபாண்டியன் படத்தின் இசையமைப்பாளராக நான்தான் இருக்க வேண்டும் என அவர் ஆசை பட்டுள்ளார். இதற்காக பல இசையமைப்பாளர்களை பரிந்துரை செய்தும் அவர் ரகுநந்தன் தான் இசையமைக்க வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார். அதனால் தான் சுந்தரபாண்டியன் படத்திற்கு இசையமைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.

சுந்தரபாண்டியன் படம் சுமார் 150 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. படத்தை நானும் எனது நண்பர் விஜய் சேதுபதியும் தியேட்டரில் பார்த்தோம். சுந்தரபாண்டியன் படத்தில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் பீட்சா படத்தில் நடித்த பிறகு அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். நீர்ப்பறவை படத்தில் இடம்பெற்ற பற பற பறவை ஒன்று என்ற பாடலுக்கான வரிகளை வைரமுத்து தான் எழுதினார்.

நானும் அவரும் ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு சென்று விட்டோம். அங்கு வரிகளை பார்த்ததும் எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. பின்னர் வரிகள் பற்றியும், டியூன் பற்றியும் ஜிவி பிரகாஷிடம் சொன்னேன். அதைக் கேட்டவுடன் ஜி.வி பிரகாஷ் இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும். எனக்கு வரிகள் ரொம்ப பிடித்திருக்கிறது. நான் தான் இந்த பாடலை பாடுவேன் என அடம் பிடித்து அவரே பாடினார். நினைத்தபடி பாடலும் சூப்பர் ஹிட் ஆனது என ரகுநந்தன் கூறியுள்ளார்.

admin

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

8 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

8 மணத்தியாலங்கள் ago