தனுஷூக்கு ‘சிறந்த நடிகர் பட்டம்’ கொடுத்ததால் கடுப்பான ஜி.வி.பிரகாஷ்.. இது தான் விஷியமா..?

By Divya

Updated on:

பொதுவாக சினிமாவில் மட்டும் யாரும் பெரும்பாலும் நெருங்கிய நண்பர்களாக இருக்க மாட்டார்கள். பிற்காலத்தில் ஒருவருக்கொருவர் போட்டியாக வந்துவிட்டால் அது அந்த நட்பை கெடுத்துவிடும். அப்படி தமிழ் சினிமாவில் பலர் நட்பில் விரிசல் விழுந்திருக்கிறது. அப்படி விரிசல் விழுந்த பிரபலங்களில் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் அடங்குவர். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்பது பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது.

   

இவர்கள் இருவரும் இணையும் படங்களின் பாடல்கள் எப்போதுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும். ஆடுகளம், அசுரன், பொல்லாதவன் உட்பட பல படங்களில் இருவரும் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். இப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே இன்று வரையிலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒர் படத்தில் கூட இணையவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷூன் கேப்டன் மில்லர் படத்தில் இருவரும் இணைந்திருக்கின்றனர். இதற்கிடையில், தனுஷ், ஜிவி பிரகாஷூக்கு துரோகம் செய்து விட்டதாக செய்தியாளர் பிஸ்மி பேசியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல தயாரிப்பாளர்கள் ஜிவி பிரகாஷை ஹீரோவாக புக் செய்ய இருந்ததாகவும், அதனை தனுஷ் இடையில் புகுந்து காலி செய்ததாகவும், அதனால் தான் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டதாகவும் பிஸ்மி கூறியிருந்தார். இந்த நிலையில், அதே பிஸ்மி, நடிகர் விஜய்க்கு கொடுக்க வேண்டிய சிறந்த நடிகருக்கான விருதினை தனுஷூக்கு வழங்கியதில் ஜிவி பிரகாஷ் கோபமானதாக தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருதினை தர ஏற்பாடு செய்து, அவரது பேட்டியை முதன் முதலாக அவர்களது பத்திரிக்கையில் அச்சடிக்க வேண்டும் என முற்பட்டனராம்.

அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவிர்த்தவர்கள், ஜிவி பிரகாஷீடம் உதவி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு ஜிவி ஒத்துழைப்பு கொடுக்காததால், திடீரென தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கி, அவரைப் பற்றின நேர்காணலை அவர்களது பேப்பரில் அச்சடித்துள்ளனர். இதனால் கடுப்பான ஜிவி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இருந்ததாக கூறியிருக்கிறார்.