SIR பணிசுமையால் குஜராத்தில் ஒரு ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. SIR பணி சுமை காரணமாக குஜராத்தின் கிர் மாவட்டத்தில் பணியாற்றும் 40 வயதான ஆசிரியரும் பூத் லெவல் அலுவலருமான அரவிந்த் முல்ஜி வதேர் தனது சொந்த ஊரான தேவ்லி கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். தன் மனைவிக்கு அவர் எழுதிய கடிதத்தில், என்னால் இனிமேல் இந்த SIR பணிகளை தொடர முடியாது. நான் சில நாட்களாகவே மிகுந்த சோர்வாகவும் மன அழுத்தத்திலும் உள்ளேன். நம்முடைய மகளை நன்றாக கவனித்துக் கொள். வேறு வழியே இல்லாமல் தான் நான் இந்த இறுதி முடிவை எடுத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த கடிதத்தை கைப்பற்றியுள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…