#image_title
இந்து மத சாஸ்திரத்தில் பல விஷயங்கள் கூறப்பட்டிருக்கிறது. கஷ்டங்கள் தீர கவலைகள் தீர அதிர்ஷ்டம் உண்டாக பணம் சேர தனம் தானியம் பெருக என ஒரு சில விஷயங்களை நாம் கடைபிடிக்கும்போது அது நமக்கு நிச்சயம் பலன் தரும் என்று கூறப்பட்டிருக்கிறது. அது போல நம் வீட்டில் பணம் அதிர்ஷ்டம் மகிழ்ச்சி தங்குவதற்கு ஒரு சில செடிகளை வளர்த்தால் அது நமக்கு நன்மை தரும் என்று கூறப்பட்டிருக்கிறது. அவை என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
முதலாவதாக எல்லார் வீட்டிலும் இருக்க வேண்டியது துளசி செடி. துளசி தெய்வ தன்மை வாய்ந்ததாகவும் லட்சுமி வாசம் செய்யும் செடியாகவும் இருக்கிறது. இந்த துளசி செடியை வைத்து அதன் முன்னால் ஒரு தீபம் ஏற்றி வழிபட்டு வரும் போது லட்சுமி தேவியின் அருள் கிடைத்து நம் வீட்டில் அதிர்ஷ்டமும் பணமும் கொட்டும்.
அடுத்ததாக வளர்க்க வேண்டிய செடி பன்னீர் ரோஜா. நம் வீட்டின் முன்னால் தொட்டியில் பன்னீர் ரோஜா வளர்க்க வேண்டும். இந்த பன்னீர் ரோஜாவின் பன்னீர் மனம் நம் வீடு முழுவதும் பரவும் போது அது அதிர்ஷ்டத்தை வர வைக்கும் மற்றும் லட்சுமி தேவி வாசம் புரிவாள்.
அடுத்ததாக வளர்க்க வேண்டியது மல்லிகை செடி. பொதுவாக எல்லா தெய்வங்களுக்கும் விருப்பமான சாற்றக்கூடிய பூ மல்லிகை. இந்த மல்லிகை செடியை கிழக்கு பக்கமாக நல்ல சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வளர்க்கும் போது நம் வீட்டில் தெய்வங்களையும் அதிர்ஷ்டத்தையும் பணவரவையும் மேம்படுத்தும்.
அடுத்ததாக லில்லி செடி. லில்லி செடிக்கு காற்றை தூய்மைப்படுத்தும் தன்மை உண்டு. அதனால் லில்லி செடியும் அதிர்ஷ்டத்தை வர வைக்கும் செடியாக பார்க்கப்படுகிறது. அடுத்ததாக நம் வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு பூ இட்லி பூ எனப்படும் வெட்சிப் பூ. மன்னர் காலத்தில் போருக்கு செல்லும்போது இந்த வெற்றி பூவைதான் சூடி செல்வார்களாம். அதனால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் வீட்டில் நீங்கள் இந்த இட்லி பூ எனப்படும் வெட்சி பூவை வளர்க்கும்போது வெற்றிகள் தானாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…
வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் மூன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…