“தாத்தாவும், பாட்டியும் அங்க…” சாப்பாடு கொடுக்க சென்று அலறியடித்து ஓடி வந்த பேரன்… பதறிய குடும்பத்தினர்…. குலை நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

Spread the love

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள குண்டுக்கல் ராமப்பகொட்டாய் பகுதியில் தனியாக வசித்து வந்த ஜெயராமன் – அமராவதி தம்பதியினர் தென்னை மட்டை பின்னும் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு அருகில் வசிக்கும் மகன் குடும்பத்தினர் தினமும் உணவளித்து பராமரித்து வந்த நிலையில், நேற்றிரவு சாப்பாடு கொடுக்கச் சென்ற பேரன் நவநீதன், இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அலறித் துடித்துள்ளார். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் டி.ஐ.ஜி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தீவிர விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த அமராவதி அணிந்திருந்த தங்கக் காதணி மற்றும் மூக்குத்தி ஆகியவை மாயமாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நகைகளைக் கொள்ளையடிப்பதற்காக இந்த இரட்டைக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

4 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

24 minutes ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

35 minutes ago

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

44 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

51 minutes ago