மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் சினிமா கதையையே மிஞ்சும் வகையில் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய அரசுத் துறையில் பணியாற்றும் 42 வயது பெண் அதிகாரி ஒருவர், ஏற்கனவே திருமணமான 54 வயது நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த நபருக்கு 16 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அந்த நபரின் மனைவிக்கு தெரியவந்ததையடுத்து, குடும்பத்தில் கடும் மோதல்கள் ஏற்பட்டு, குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியானது.
இந்த விவகாரம் குடும்ப நீதிமன்றத்திற்குச் சென்றபோது, அந்த நபர் தனது மனைவியுடன் வாழ விருப்பமில்லை என்றும், தனது காதலியுடன் செல்லவே விரும்புவதாகவும் பிடிவாதமாகத் தெரிவித்தார். அதே சமயம், தனது குழந்தைகள் மீது தமக்கு மிகுந்த பாசம் இருப்பதாகவும் அவர் கூறினார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சுமூகமான முடிவை எட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அப்போது அந்த நபரின் மனைவி, தனது குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்காக ஒரு விசித்திரமான நிபந்தனையை விதித்தார்.
தனது கணவரை விவாகரத்து செய்து காதலியுடன் அனுப்பி வைக்க வேண்டுமானால், இழப்பீடாக 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து அல்லது ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று அந்த மனைவி நிபந்தனை விதித்தார். யாரும் எதிர்பாராத விதமாக, அந்த அரசு பெண் அதிகாரி இந்த நிபந்தனைக்கு உடனடியாகச் சம்மதித்தார். தனது காதலனைத் தன்னுடனே வைத்துக் கொள்வதற்காக, தன்னிடம் இருந்த ஒரு பிளாட் மற்றும் சுமார் 27 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை அந்த மனைவியிடம் ஒப்படைக்க அவர் முன்வந்தார்.
பணம் மற்றும் சொத்துகளைப் பெற்றுக்கொண்ட மனைவி, தனது கணவரை விவாகரத்து செய்து அந்தப் பெண்ணுடன் செல்ல அனுமதித்தார். “கணவரை விலை கொடுத்து வாங்கிய பெண் அதிகாரி” என இந்தச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. 90-களில் வெளியான ‘இரட்டை ரோஜா’ திரைப்படத்தின் கதையை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம், உறவுகளுக்கு இடையே பணமும் சொத்தும் குறுக்கிடும்போது ஏற்படும் மாற்றங்களுக்கு ஒரு சாட்சியாக மாறியுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…