Categories: சினிமா

அஜித் மேல என்ன காண்டுன்னு தெரியலயே… படத்துல ஓப்பனாக் கலாய்ச்ச கவுண்டமணி!

Spread the love

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.

16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கு உடனேயே பெரிய வாய்ப்புகள் உருவாகிவிடவில்லை. கிடைத்த கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்தார். 80 களுக்கு பிறகே அவர் செந்திலோடு இணைந்து தங்களுக்கென ஒரு ஸ்டைல் காமெடியை உருவாக்கினார்.

இருவரும் 20 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து நடித்த நிலையில் கடைசியாக நடித்த எஸ் மேடம் படத்தில் இரண்டு பேரின் காமெடியும் சிறப்பாக அமைந்திருக்கும். அந்த படத்தில் அஜித் விஜய் ஆகிய இருவரையும் கவுண்டமணி செம்மையாகக் கலாய்த்திருப்பார்.

கார்மெண்ட்ஸ் கம்பெனியில் கவுண்டமணி செந்தில் இருவரும் வேலை பார்க்க, செந்திலை அங்கிருப்பவர்கள் ‘தல’ என்று அழைப்பார்கள். அதைக் கேட்டு கடுப்பாகும் கவுண்டமணி ‘ஏண்டா தலைவா –ங்குறதே நாலெழுத்து அதை சுருக்கி இவன தல-ன்னு கூப்புடுறீங்களா?” என சொல்லி கலாய்ப்பார். தன் சக நடிகர்களை திரைக்குப் பின் கலாய்ப்பதில் கவுண்டமணி ஆர்வம் காட்டுவார். ஆனால் அஜித்தை ஒரு படத்திலேயே கலாய்த்திருப்பது ஏனென்று தெரியவில்லை.

அந்த படம் வருவதற்கு முந்தைய ஆண்டுதான் அஜித்தின் ‘தீனா’ திரைப்படம் வெளியாகி இருந்தது. அந்த படத்தில் அஜித்தை ‘தல’ என்று அழைக்க, அதுவே அவரின் பட்டப்பெயர் ஆனது. அப்போது முதல் அஜித்தை தல என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

vinoth

Recent Posts

இந்தியாவுக்கு பலத்த அடி!… “இனி ஒரு சொட்டு கூட கிடையாது”… ரஷ்யா, ஈரானுக்கு அமெரிக்கா போட்ட ரெட் கார்டு… கதிகலங்கிய உலக நாடுகள்…!!!

மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…

4 minutes ago

“நாங்கள் தயார்”.. வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவா?… உலக நாடுகளை உலுக்கும் அமெரிக்காவின் அடுத்த மூவ்… அதிரும் சர்வதேச அரசியல்…!

சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…

7 minutes ago

குக் வித் கோமாளியில் நடந்த அடுத்த சம்பவம்… மேடையிலேயே கதறி அழுத ரோஜா… என்ன ஆச்சு…?

சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…

14 minutes ago

உலகிற்கு வந்த சோதனை… கச்சா எண்ணெய் முதல் மீன் வரை.. சீனா விரிக்கும் “மிதக்கும் வலை”… அதிர்ச்சியில் இந்தியா…!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…

19 minutes ago

தித் திக் நிமிடங்கள்!…விளக்கேற்றிய பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் பரவிய தீ… அலறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியில் பெரும் சோக சம்பவம்..!!

தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…

20 minutes ago

“யாரு லாலிபாப் பேபி?”… விஜயை வம்புக்கு இழுத்த பிரேமலதாவிற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…

28 minutes ago