அய்யய்யோ… தவறான பாதையில் வந்து வெறிச்செயல்… சரக்கு வாகன ஓட்டுநருக்கு விழுந்த சரமாரி அடி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!

Spread the love

பெங்களூரு ஊரக மாவட்டம் தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள ஃபாக்ஸ்கான் உற்பத்தி ஆலை அருகே அதிர்ச்சியளிக்கும் சாலை வன்முறைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சரியான பாதையில் சென்று கொண்டிருந்த டாடா ஏஸ் சரக்கு வாகன ஓட்டுநரை, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தாக்கியுள்ளார். இந்த ஒட்டுமொத்த சம்பவமும் சரக்கு வாகனத்தில் இருந்த டாஷ்கேமில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இச்சம்பவத்தின் போது, எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிடுவதற்காகச் சரக்கு வாகன ஓட்டுநர் தனது வாகனத்தைச் சற்றே ஓர ஒதுக்கியுள்ளார். அப்போது, தவறான பாதையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி, இதைப் பார்த்து ஆத்திரமடைந்துள்ளார். தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமின்றி, அந்தச் சரக்கு வாகனத்தைத் துரத்திச் சென்று வழிமறித்து, அதன் ஓட்டுநரைத் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

https://twitter.com/HateDetectors/status/2081684402019652007/video/1

இச்சம்பவம் பெங்களூரு ஊரக மாவட்டத்தின் விஸ்வநாதபுரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் இருந்த டாஷ்கேம் காட்சிகள் காவல்துறையினருக்குக் கிடைத்துள்ளதால், குற்றவாளியை விரைவில் அடையாளம் கண்டு கைது செய்ய இந்த வீடியோ முக்கிய ஆதாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Swetha

Recent Posts

“ஐயோ வலிக்குது…” இளம்பெண்ணுக்கு உயிரோடு தீ வைத்த வாலிபர்… ஹாஸ்பிடலுக்குள் நுழைந்து அரங்கேறிய பயங்கரம்…. திக் திக் வீடியோ வைரல்…!!

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினிப் பிரிவில் பணியாற்றி வந்த 35 வயது பெண் ஊழியர்…

5 minutes ago

ரூ.5 லட்சத்தை சுருட்டி விட்டு ரூ.27 லட்சம் மிரட்டல்… பிக்பாஸ் வர்ஷினி அதிரடி கைது…. ஹோட்டல் ரூமில் நடந்த விபரீதம்….!

குறும்படத்தில் நடிப்பதற்காக ரூ.5 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதுடன், அதைத் திரும்பக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பிக்பாஸ்…

10 minutes ago

“கடைசி போன் கால்…” கான்ஸ்டபிள் சொன்னதை கேட்டு கதறிய நிச்சயதார்த்த பெண்…. அந்த காட்சியை கண்டு பதறிய போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஹைதராபாத் நகரின் மலாக்பேட் பகுதிக்கு உட்பட்ட சாலிவாகன நகரில் வசித்து வந்த 35 வயதான போலிஸ் காவலர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை…

18 minutes ago

“விவசாயியை சுருட்டி வளைத்த ராட்சத மலைப்பாம்பு….” கழுத்தையும், கைகளையும் இறுக்கி உயிரை குடிக்க முயன்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள விளைநிலம் ஒன்றில், உள்ளூர்வாசியான இளைஞர் ஒருவர் தனது கால்நடைகளுக்காகப் புல்…

42 minutes ago

சீச்சீ…! இப்படியா பண்ணுவீங்க…? லிப்டுக்குள் சிறுநீர் கழித்த நபர்…. முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், குடியிருப்பாளர்கள் பயன்படுத்தும் லிஃப்ட்டிற்குள் நபர் ஒருவர் நுழைந்துள்ளார். லிஃப்ட்…

55 minutes ago