தங்கம் விலையில் எதிர்பாராத திருப்பம்…. போர் பதற்றத்திலும் இப்படியொரு ட்விஸ்ட்டா?…. ஷாக் நியூஸ்….!

Spread the love

சர்வதேச சந்தையில் நிலவி வரும் பல்வேறு மாற்றங்களுக்கு மத்தியில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. வழக்கமாகப் போர்ச் சூழல் நிலவும் போது பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை உயரும். ஆனால், தற்போதைய மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியிலும், முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து அமெரிக்க டாலரை நோக்கித் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளதால் தங்கத்தின் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை குறைவுக்கு மற்றொரு முக்கிய காரணமாக டாலரின் மதிப்பு உயர்வு பார்க்கப்படுகிறது. ஈரானின் பதிலடித் தாக்குதல்களை எதிர்கொள்ள மத்திய கிழக்கு நாடுகள் டாலர் பணப்புழக்கத்தை நாடியுள்ளன. மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலரில் நடைபெறுவதால், அதன் தேவை அதிகரித்துள்ளது. பொதுவாக டாலர் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலை சரிவது உலகளாவிய சந்தை விதியாகும்; அதுவே தற்போதும் எதிரொலித்து வருகிறது.

சென்னையில் இன்றைய விலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 1,21,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு 265 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 15,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த பிப்ரவரி இறுதியில் ஒரு சவரன் தங்கம் 1,26,000 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாகக் குறைந்து வருவது நகை பிரியர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இருப்பினும், சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று லேசான ஏற்றத்தைச் சந்தித்துள்ளதால், இந்தியச் சந்தையிலும் அதன் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த விலை சரிவு தற்காலிகமானதா அல்லது இன்னும் குறையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.

Nanthini

Recent Posts

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

13 minutes ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

29 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

39 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

41 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

47 minutes ago