#image_title
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் கோட் திரைப்படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர். கோட் படத்தின் முதல் பாதியும், 2-ஆம் பாதியும் பக்காவாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
#image_title
கோட் திரைப்படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு விஜயுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். சிவகார்த்திகேயன் டோனி ஆகியோர் கேமியோ ரோலில் அசத்தியுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிக திரையரங்குகளில் ரிலீசான கோட் திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் 126. 32 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோட் திரைப்படம் இந்தியா முழுவதும் 2- வது நாளில் 25 கோடிக்கு மேலும், உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கு மேலும் வசூல் செய்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆக மொத்தம் 2 நாட்களில் கோட் திரைப்படம் 230 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது.எப்படி பார்த்தாலும் இந்த வாரத்திலேயே கோட் திரைப்படம் 500 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…