#image_title
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் கோட் திரைப்படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர். கோட் படத்தின் முதல் பாதியும், 2-ஆம் பாதியும் பக்காவாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கோட் திரைப்படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு விஜயுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். சிவகார்த்திகேயன் டோனி ஆகியோர் கேமியோ ரோலில் அசத்தியுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிக திரையரங்குகளில் ரிலீசான கோட் திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் 126. 32 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 2- வது நாளில் 25 கோடிக்கு மேலும், உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கு மேலும் வசூல் செய்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆக மொத்தம் 2 நாட்களில் கோட் திரைப்படம் 230 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் 3-வது நாளில் கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…
திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…
சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…
பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…