Categories: சினிமா

GOAT திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..? ஒன்னு விடாமல் புட்டு புட்டு வைத்த பிரபலம்..!!

Spread the love

பிரபல நடிகரான விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான பிஸ்மி கோட் படத்தின் வசூல் விவரங்கள் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, கோட் படக்குழுவின் சம்பளம் 234.15 கோடி ரூபாய், புரொடக்ஷன் செலவு 99 கோடி ரூபாய் என மொத்தம் பட்ஜெட்டுக்கு மட்டும் 333.15 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது.

தமிழக தியேட்டர் வினியோகம் 76 கோடி ரூபாய்க்கும், கேரளா தியேட்டர் விநியோகம் 16 கோடி ரூபாய்க்கும், கர்நாடக தியேட்டர் விநியோகம் 13 கோடி ரூபாய்க்கும், ஆந்திர தியேட்டர் விநியோகம் 15 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் வட இந்தியாவிற்கு 15 கோடி ரூபாய், ஒரிசாவுக்கு 25 லட்சம், வெளிநாட்டு விநியோகம் 70 கோடி என கோட் திரைப்படம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோட் திரைப்படத்தின் ஆடியோ 24 கோடிக்கு, டிஜிட்டல் உரிமை 112 கோடிக்கும், சாட்டிலைட் 85 கோடிக்கும் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் கோட் திரைப்படம் 416.25 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டது. இந்த நிலையில் திரையரங்குகளில் வியாபாரம் 205.25 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் 30.6 கோடி ரூபாய், இந்திய அளவில் பார்க்கும்போது முதல் நாள் கோட் திரைப்படம் 78. 32 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் உலக அளவில் 48 கோடி என மொத்தமாக முதல் நாளில் 128.32 கோடி வசூல் செய்துள்ளது. அதில் விநியோகஸ்தர்களின் பங்கு மட்டும் 110 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

தமிழக விநியோகஸ்தரின் வட்டி மற்றும் செலவு போக அவருக்கு 20 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாம். கேரளாவில் அதிகபட்சமாக 13 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. அங்கு விநியோகத்திற்கு 8 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதிகபட்சமாக கர்நாடகாவில் கோட் திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்தது. அங்கு விநியோகஸ்தருக்கு 1 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வட இந்தியாவின் 12 கோடி ரூபாய் பங்கு ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கிடைத்துவிட்டது. கேரளா மற்றும் கர்நாடக வீடியோஸ் விநியோகஸ்தர்களை தவிர மற்ற அனைவருக்கும் லாபம் கிடைத்துள்ளது. இதில் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு 126.10 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. அதில் வட இந்தியா மற்றும் ஆந்திரா விநியோகஸ்தர்களின் ரீபண்ட் ஆன 10.5 கோடி ரூபாய் பணத்தை கழித்தால் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு 115.60 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருப்பதாக தெரிகிறது. வணிக ரீதியாக பார்த்தாலும் கோட் திரைப்படம் வெற்றி பெற்றது உறுதி தான்.

#image_title

admin

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

4 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

4 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

4 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

5 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

5 மணத்தியாலங்கள் ago