PMKவில் அதிகாரம் படைத்தவர் ராமதாஸ் மட்டுமே… ஒரே போடாய் போட்ட G.K.மணி….!

Spread the love

பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி என்னை எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும் என்று பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி கேள்வி எழுப்பியுள்ளார். பாமகவின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி இடையேயான மோதல் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ் அந்தப் பதவியை தாமே எடுத்துக் கொள்வதாக அறிவித்திருந்தார். மேலும் பாமக செயல் தலைவராக தன்னுடைய மகள் காந்திமதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஆனால் கட்சிக்கு தலைவர் நான்தான் என்று அறிவித்துக் கொண்ட அன்புமணி தன்னுடைய ஆதரவாளர்களுடன் பனையூரில் தனியாக அலுவலகம் அமைத்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றார். இப்படியான நிலையில் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருவதால் ஜிகே மணி நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பு நேற்று அறிவித்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜிகே மணி, என்னை கட்சியிலிருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் கிடையாது. பாமக என்றால் ராமதாஸ் தான் அடையாளம்.

25 ஆண்டுகள் தலைவராக இருந்தேன். மனிதநேயம் உள்ள மனித பண்புள்ள மனிதருக்கு இதுபோன்ற சிந்தனை வருமா. அன்புமணியை கட்சிக்கு கொண்டு வந்ததே நான்தான். பாமகவில் அன்புமணி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் என்னை எப்படி நீக்க முடியும். என்ன அதிகாரமும் ராமதாஸ் இடம்தான் உள்ளது. அன்புமணியை கட்சியை விட்டு ராமதாஸ் நீக்கிவிட்ட நிலையில் பாமகவில் இல்லாத ஒருவர் என்னை எப்படி நீக்க முடியும் என்று ஜி கே மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Nanthini

Recent Posts

கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.25 லட்சம்னு ஏலம் விடுறாங்க…. ரூ.15 கோடி பேரம் விவகாரம்…. அதிர வைக்கும் ஆடியோ பின்னணி…. செல்லூர் ராஜூவின் செம அடி….!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…

4 minutes ago

“விஜய் அமைதியா இருக்கார்னா சும்மா இல்லை.. மாஸ் பிளான் பண்றாரு”…. இனிதான் இருக்கு கச்சேரி…. மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!

அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…

11 minutes ago

அடச்சீ நீயெல்லாம் ஒரு தாயா?….. பெற்ற மகளுக்கே தாயே செய்த காரியம்.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை….. அதிர்ச்சியில் உறைந்த ஆவடி….!

சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

16 minutes ago

காவல்துறையில் இப்படியொரு கொடூரமா?…. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.எஸ்.ஐ…. நெல்லையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…

23 minutes ago

“ஒத்த ஆளை எதிர்க்க 36 கட்சிகளா?….. ஆட்சியை கலைச்சுத் தான் பாருங்களேன்”…. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா…. கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்…..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…

30 minutes ago