பேடிஎம் (Paytm) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவின் போது 200 ரூபாய் வரை சேமிக்கக்கூடிய சிறப்பு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் எரிவாயு விலையில் இருந்து பொதுமக்களுக்குச் சற்றே நிம்மதி அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாரத் கேஸ், ஹெச்பி (HP) கேஸ் மற்றும் இண்டேன் (Indane) என அனைத்து முன்னணி எரிவாயு நிறுவனங்களின் சிலிண்டர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.
இந்தச் சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் பேடிஎம் செயலி மூலம் தங்களது சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்த பிறகு, வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஸ்க்ராட்ச் கார்டு (Scratch Card) வழங்கப்படும். அந்த கார்டைத் தேய்க்கும்போது, அதிர்ஷ்டசாலிகளுக்கு அதிகபட்சமாக 200 ரூபாய் வரை கேஷ்பேக் தொகை நேரடியாக அவர்களது பேடிஎம் வாலட் அல்லது வங்கிச் கணக்கில் சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாகப் பேடிஎம் மூலம் கேஸ் சிலிண்டர் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சலுகை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படலாம். எரிவாயு முன்பதிவு செய்யும்போது ‘Book Gas Cylinder’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, எரிவாயு நிறுவனத்தின் பெயர் மற்றும் நுகர்வோர் எண்ணை உள்ளிட்டு கட்டணம் செலுத்துவதன் மூலம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான ஆனந்தராஜ், தனது 22 வயது ஊழியர் கிரண் மற்றும் அவரது 19 வயது மகளைத் தனது…
கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…