Categories: சினிமா

என் குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியல, அந்த படத்தால குடும்பத்துல 5 பேர் உயிர் போயிடுச்சு.. நேரலையில் புலம்பிய கஞ்சா கருப்பு..

Spread the love

பிதாமகன் படத்தில், டேய் கஞ்சா கொடுக்கி, பாட்ட போட்றா என்ற காட்சியில் வந்தவர்தான் கஞ்சா கருப்பு. பின், இயக்குநர் அமீர் இயக்கிய ராம் படத்தில் ஆளவந்தான் கேரக்டரில் காமெடியில் அசத்தியிருப்பார். பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறிய அறை எண் 305ல் கடவுள் படத்தில், இவரும் சந்தானமும்தான் ஹீரோக்கள். தனது 100வது படத்தை வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து, பலத்த நஷ்டத்தை சந்தித்தவர் கஞ்சா கருப்பு. இப்போது இறைவன் மிகப் பெரியவன், சபரி ஐயப்பா, நல்லது செய்யப் போறோம், ஓம்காளி ஜெய்காளி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Ganja Karupu

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் கஞ்சா கருப்பு கூறியதாவது, இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் போவேன். ஒரு கெஸ்ட் மாதிரி போயிட்டு, 2 நாள் மட்டும் அந்த வீட்டுல இருந்துட்டு வந்துடுவேன். ரொம்ப நாளெல்லாம் அந்த வீட்டில் என்னால் இருக்கவே முடியாது. என்னுடைய உழைப்பே என் புள்ளைங்களை பாதுகாக்கணும். இன்னைக்கு நிலைமைக்கு என்னோட குழந்தைக்கு என்னால ஸ்கூல் பீஸ் கட்ட முடியலை. பள்ளிக்கூடத்துல இருந்து அனுப்பிச்சிட்டாங்க. நான் பணம் கட்டறேன்னு சொல்லி ரெண்டு நாள் டைம் வாங்கியிருக்கேன்.

Ganja Karupu

உலகத்துக்கே நான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். என் குழந்தைகளுக்கு என்னால பீஸ் கட்ட முடியலை. என் மனசுக்குள்ள வருத்தமாகி எனக்குள்ளே நானே அழுதுகிட்டு இருக்கேன். இப்படி வருத்தப்பட்ட அழுத விஷயங்கள் நிறைய இருக்கு. சினிமா படம் எடுக்கப் போய் என்னோட ஒரு தப்பான பயணத்தை நான் உருவாக்கி, என்னோட லெட்டர் பேடுல கையெழுத்து போட்டது, என்னோட வவுச்சர்ல கையெழுத்து போட்டது மிகப்பெரிய தப்பு. இதனால அஞ்சு உயிர் போயிருக்கு. எப்படி இருந்த கஞ்சா கருப்பு இப்படி ஆயிட்டானேன்னு நினைச்சு வேதனைப்பட்டு அஞ்சு பேரு இறந்து போயிட்டாங்க. ஆனா யாருக்கும் தெரியாது. என்னோட அக்கா பையன், எங்க அய்யா, எங்க ஆயா அதுக்கு அப்பறம் என்னோட மாமா இப்படி அஞ்சு பேரோட உயிர் போயிருக்கு. இந்த படம் பண்ணினதால் இப்படி ஆயிடுச்சு, என்று வருத்தப்பட்டு பேசி இருக்கிறார் நடிகர் கஞ்சா கருப்பு.

admin

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

1 மணத்தியாலம் ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

1 மணத்தியாலம் ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

1 மணத்தியாலம் ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

1 மணத்தியாலம் ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

2 மணத்தியாலங்கள் ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

2 மணத்தியாலங்கள் ago