பழனி முருகன் கோயில் சொத்தை சுருட்டிய கும்பல்…! சார்பதிவாளர் சஸ்பெண்ட்.. முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு…? வெடித்த சர்ச்சை…!!

Spread the love

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, தகுதிநீக்கம் செய்யப்பட்ட நபர்கள் சிலர் முறைகேடாக விற்பனை செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. எவருக்கும் விற்பனை செய்ய சட்டப்படி உரிமை இல்லாத இந்த நிலத்தை, மாற்றுப் பொறுப்பில் வந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் என்பவர் உரிய ஆவணங்களை ஆய்வு செய்யாமல் வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகியோருக்கு வெறும் 2 கோடி ரூபாய்க்குத் தவறான முறையில் கிரயம் செய்து கொடுத்துள்ளார். சுமார் 100 கோடி ரூபாய் சந்தை மதிப்புடைய இந்தத் திருக்கோயில் சொத்து மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் தற்பொழுது தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் கொடுத்த புகாரின் அடிப்படையில், கடமை தவறிய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த நிலத்தை மோசடியாக விற்பனை செய்த முருகதாஸ் மற்றும் அதனை வாங்கிய நபர்கள் மீது 5 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அந்தப் போலியான பத்திரப்பதிவும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டவிரோத நில அபகரிப்புப் பின்னணியில் முன்னாள் திமுக அமைச்சர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளதால், இவ்வழக்கு அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

27 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

28 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

41 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago