#image_title
நடிகை கேப்ரியல்லா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தனகயாக நடித்திருந்தார்.நடிகை கேப்ரியல்லாவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.bigboss நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய இவருக்கு கிடைத்து என்னவோ சீரியல் வாய்ப்பு தான். “ஈரமான ரோஜாவே” சீசன் 2 சீரியலில் நடித்து வந்தார் நடிகை கேப்ரியல்லா. இதன் மூலமாக தமிழ் ரசிகர்களின் குறிப்பாக சீரியல் ரசிகர்களின் மனதில் குடியேறிவிட்டார் கேப்ரியல்லா. தற்போது சின்ன மருமகள் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கேப்ரியல்லா, நான் வேலைக்கு போயிட்டு வந்தால் மனது முழுக்க அங்கே தான் இருக்கும். அப்போது குடும்பத்தை என் அம்மா தான் முழுக்க முழுக்க பார்த்துக் கொள்கிறார். எனக்கு சீரியலுக்கு கிளம்பும்போது கூட எனக்கு எல்லாவற்றையும் அம்மா தான் செய்து கொடுப்பார். நான் என்னுடைய உடம்பை வைத்துக்கொண்டு ரொம்ப பாதுகாப்பின்மையாக தான் இருக்கேன்.
நான் ஒல்லியா இருந்தாலும் குண்டா இருந்தாலும் எதையுமே கண்டுக்கிறது கிடையாது. நான் ஒல்லியா இருக்கும்போதும் ட்ரோல் பண்ணுறாங்க. குண்டா இருந்தாலும் ட்ரோல் பண்றாங்க. அத பத்தி எனக்கு கவலையே இல்ல. ஒருத்தர குறை கண்டுபிடிக்க ஆள்கள் இருக்க தான் செய்வார்கள். எல்லோரும் ஜிம்முக்கு போய் வெயிட் குறைக்க தான் செய்வாங்க நான் ஜிம்முக்கு ஒல்லியா இருக்கும் போது வெயிட் போடுவதற்காக ஜிம்முக்கு போனேன். ஒரு நாளைக்கு பத்து இட்லி எல்லாம் சாப்பிட்டு வெயிட் போட்டேன்.
அதன் பிறகு அதிகமா வெயிட் போட்டதால் அதை குறைத்து விட்டேன் . என்னுடைய உடம்பை நான் தேர்ந்தெடுக்க முடியாது. எனக்கு இந்த மாதிரி உடல்வாகு வந்துருச்சு. நான் நார்மல் டிரஸ் போட்டாலும், மாடர்ன் டிரஸ் போட்டாலும் எல்லாத்துக்குமே கமெண்ட் செய்ய ஆள் இருக்கு. எல்லாத்தையும் ஆபாசமா பார்க்க ஆட்கள் எங்கே இருக்காங்க. நான் எதையுமே கண்டுக்க மாட்டேன். ஒரு கமெண்ட் கூட படிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…