திமுக ஊழல் மீது நடவடிக்கை எப்போ?… “இப்படியே போச்சுன்னா அவ்ளோதான்…” மக்கள் நம்பிக்கையை இழந்துடுவீங்க… தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை…!

Spread the love

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 2026-2027ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுப் பேசுகையில், திமுகவிற்கு மாற்றாக தமிழக மக்கள் அளித்த வாய்ப்பை ஏற்று தமிழக வெற்றிக்கழக அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் கூடுதல் வேகம் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுக ஆட்சிக்கால ஊழல்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை வழக்குகளை விசாரிக்க 5 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், மதுக்கடைகள் மற்றும் பீர் தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூட வேண்டும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆண்டுதோறும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.

மதுரை மற்றும் கோவை போன்ற முக்கிய மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டார். மேலும், கல்வித்துறையை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும், இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே கல்விக்கொள்கை மற்றும் நுழைவுத்தேர்வு போன்ற சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். ஊழல் வழக்குகளை விசாரிக்கவும், போதைப்பொருள் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும் டிஜிபி தரத்திலான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அவர் தனது நிழல் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கினார்.

தற்போதைய புதிய அரசு ஆரம்பத்தில் காட்டிய வேகம் தற்போது சற்று குறைந்து மெத்தனமாகச் செயல்படுவதாகச் சுட்டிக்காட்டிய அன்புமணி, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைப் பட்டியலிட்டு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்று எச்சரித்தார். கனிம வளங்களைச் முறையாக நிர்வகிப்பதன் மூலம் அரசின் வரி அல்லாத வருவாயை கணிசமாக உயர்த்த முடியும் என்பதையும் அவர் விளக்கினார். ஊழல் பணத்தை அரசு கஜானாவிற்குக் கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதோடு, மக்கள் நலனை முன்னிறுத்திய ஆக்கப்பூர்வமான திட்டங்களை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

Visaka

Recent Posts

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 minutes ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

16 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

20 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

29 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

37 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

38 minutes ago