சமீப காலமாகவே குழந்தை பேருக்காக டாக்டர்களை தேடி வரும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக கருத்தரிப்பு மருத்துவமனைகளை நோக்கி தம்பதிகள் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் குழந்தை பேருக்காக ஏங்கும் இந்த தம்பதிகளை குறி வைத்து மோசடிகள் அரங்கேறி வருவது அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூதன முறையில் ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்தியூர் அருகே உள்ள கொல்லப்பாளையம் பகுதிக்கு 45 வயது உடைய ஆண், பெண் இருவர் காரில் வந்துள்ளார்கள். அதனை தொடர்ந்து அவர்கள் குழந்தை இல்லா தம்பதிகள் குறித்து விசாரித்து அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்கள்.
சித்த மருத்துவம் முறைப்படி குழந்தை இல்லாதவர்களுக்கு மருந்து கொடுக்கிறோம் என்று ஆசை வார்த்தை கூறி 3 ஆயிரம் ரூபாய் வாங்கி உள்ளார்கள். இதனை நம்பிய தம்பதிர் தனித்தனியாக மருத்துவ பரிசோதனைக்கு சம்மதித்துள்ளார்கள். இதில் வாலிபருக்கு உயிரணுக்கள் குறைவாக இருப்பதாகவும், மனைவிக்கு கர்ப்பப்பையில் நீர் கோர்த்திருப்பதாகவும் நம்ப வைத்துள்ளார்கள். பிறகு நாங்கள் கொடுக்கும் மருந்தை மூன்று மாதம் சாப்பிட வேண்டும் என்றும் அதற்கு 18 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.
ஏதோ ஒரு மாத்திரையை கொடுத்து சாப்பிட சொல்லி உள்ளார்கள். தம்பதியினரும் அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் பாதி மயக்க நிலைக்கு சென்றுள்ளார்கள். அதன் பிறகு எந்தவித கேள்வியும் கேட்காமல் அவர்கள் கேட்ட 18,000 பணத்தை வால்வர் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த கும்பல் இரண்டு டப்பாக்களில் சித்த மருந்து கொடு என்று கூறி கொடுத்துவிட்டு சென்றார்கள். 4 மணி நேரத்துக்கு பிறகு அவர்கள் தெளிவுக்கு வந்த பிறகுதான் 18,000 பணம் அபேஸ் செய்யப்பட்டது தெரியவந்தது. பின்பு அவர்கள் கொடுத்த விசிட்டிங்க் கார்டை வைத்து தோடர்பு கொண்டதில் அப்படி ஒரு சித்த மருத்துவமே இல்லை என்பது தெரியவந்ததால் தம்பதியினர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…