சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தி நகரில் இருக்கும் தனியார் ரெஸ்டாரண்டில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தாரணி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் விக்னேஷ் வீடு தேடி வந்தார். அப்போது நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத்தின் வீடு காலியாக இருப்பதை பார்த்தார்.
இதுகுறித்து தொடர்ந்து விசாரித்த போது அந்த வீட்டை கேர் டேக்கராக எஸ்.டி.எஸ்.கே பிராபர்ட்டி டெக் என்ற நிறுவனத்திற்கு கொடுத்துள்ளதாக மகேந்திரா பிரசாத்தின் மனைவி ஹேமா பிரசாத் கூறியுள்ளார். அந்த நிறுவனத்தில் 25 லட்ச ரூபாய் லீச்க்கான தொகையை கொடுக்குமாறும், அவர்கள் நாகேந்திர பிரசாத்துக்கு மாதம் 36,000 பணத்தை 2 வருடத்திற்கு கொடுத்து விடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி விக்னேஷ் எஸ்.டி.எஸ்.கே நிறுவனத்திடம் காண்ட்ராக்ட் செய்து லீஸுக்கான 25 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இதனையடுத்து கேர் டேக்கராக செயல்பட்ட அந்த நிறுவனத்தினர் நாகேந்திர பிரசாத்திற்கு ஒரு வருடம் மட்டும் வாடகை தொகையை கொடுத்துவிட்டு நிறுவனத்தை மூடிவிட்டனர். கடந்த திங்கட்கிழமை நாகேந்திர பிரசாத்தின் ஆட்கள் விக்னேஷின் வீட்டை பூட்டி வெல்டிங் செய்துவிட்டு சென்றனர்.
இதனால் குடும்பத்தினருடன் வீட்டிற்குள் செல்ல முடியாமல் தவித்த விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்து வீட்டை காலி செய்யுமாறு நாகேந்திர பிரசாத் மிரட்டியதாக குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் போலீசார் தலையிட்டு விசாரித்தபோது இருதரப்பினரும் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அதாவது இரு தரப்பினரிடமும் ஒப்பந்தம் செய்த எஸ்.டி.எஸ்.கே பிராப்பர்டி டெக் நிறுவனத்தினர் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 லட்ச ரூபாய் பணத்தை விக்னேஷிடமிருந்து வாங்கியுள்ளனர்.
இதேபோல நாகேந்திர பிரசாத்துக்கு மாதம் 36 ஆயிரம் ரூபாய் பணத்தை வாடகையாக கொடுத்து வந்தனர். ஒரு பக்கம் வீட்டை லீசுக்கு விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு மறுபக்கம் அந்த வீட்டு உரிமையாளருக்கு வாடகை கொடுத்து வந்தனர். ஆனால் 2022-ஆம் ஆண்டு வரை மட்டுமே அவர்கள் வாடகை கொடுத்து நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
கடந்த ஒரு வருடமாக வாடகை பணம் வராததால் நாகேந்திர பிரசாத்துக்கும் விக்னேஷுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதே நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட நடிகர் டேனியும் கடந்த மே மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான கட்டப்பா சிவகுமாரை தேடி வருகின்றனர். அவர் மீது ஏற்கனவே பெங்களூரில் மோசடி செய்த ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது.
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…