விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் தற்போது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே மாலினி செழியன் தன்னை ஏமாற்றி விட்டான் எனக்கூறி வீட்டில் வந்து பெரிய பிரச்சனையே செய்து விட்டார். மேலும் செழியன் ஜெனியை பற்றி கூறாததை எல்லாம் கூறி நன்றாக பத்த வைத்துவிட்டு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரத்தில் ஜெனி செழியனை அறைந்து விட்டு குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இந்நிலையில் இன்றைய வாரத்திற்கான ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ‘பாக்கியா இந்த பிரச்சினையை பற்றி நம்மிடம் கூறாதது தான் முக்கிய காரணம்’ என பாக்யாவை ஏன்னா வீட்டுல எந்த பிரச்சனை நடந்தாலும் அதுக்கு பாக்கியா தான் காரணம்னு சொல்றது தானே அவங்க ஸ்டைலே. மேலும் ‘ இந்த வீட்டோட நிம்மதியவே நீ கெடுத்துட்ட’ என்று கூறுகிறார். இதைத் தொடர்ந்து அங்கு கைதட்டி கொண்டே வந்த ராதிகாவை மொத்த குடும்பமும் அதிர்ச்சியாக பார்க்கிறது.
அவர் அனைவர் முன்னிலையிலும் நின்று ‘பாக்யா வீட்டில் இதை சொல்லாதது தான் பிரச்சனையா? இவங்களா தப்பு பண்ணுனாங்க? தப்பு பண்ணுனது செழியன். அவன் பாட்டுக்கு உக்காந்து இருக்கான். இந்த வீட்ட பத்தியும், ஜெனியை பற்றியும் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல. பிரச்சனையாகும்னு தெரிஞ்சு தானே தப்பு செஞ்சா. முதல்ல அவன கேளுங்க .அதை விட்டுட்டு இவங்கள கேள்வி கேட்டு இருக்கீங்க?’ என்று பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்.
இதைக் கேட்ட மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் அப்படியே நிற்கிறது. நமக்கும் கூட கொஞ்சம் ஷாக்கா தாங்க இருக்கு. நம்ம ராதிகாவா இது ?எப்படா நேரம் கிடைக்கும் எப்படா பாக்யாவை பழிவாங்குவோம்னு நினைச்சிட்டு இருக்க ராதிகா தற்பொழுது பாக்யாவிற்கு சப்போர்ட் செய்த பேசியது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. மேலும் மன கஷ்டத்துடன் உட்கார்ந்து இருக்கும் பாக்யாவிற்கு காபி போட்டுக் கொண்டு வந்து, அவரிடம் கொடுத்து அருகிலும் அமர்ந்துள்ளார். இத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைந்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…