சென்னையில் பெண்களைக் குறிவைத்து நகை பறிக்கும் பெண் கொள்ளையர்களின் கைவரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இல்லத்தரசிகள் அல்லது நர்சுகள் போல வேடமிட்டுப் பழகும் இவர்கள், பாயாசம், காளான் சூப், பிஸ்கட் அல்லது குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகளைத் திருடிச் செல்கின்றனர். பேருந்துகள், ரயில்கள் மற்றும் மருத்துவமனைகளில் மிகவும் மரியாதையாகப் பேசி நயவஞ்சகமாகப் பழகும் இக்கும்பல், பாதிக்கப்பட்டவர்கள் மயங்கியதும் அவர்களின் தங்கச் சங்கிலிகளை நைசாகக் கழற்றிவிட்டுத் தப்பித்துவிடுகின்றனர்.
சமீபத்தில் எழும்பூர் மருத்துவமனை நர்சிடம் கைவரிசை காட்டிய நான்சி நிஷா மற்றும் பாயாசத்தில் மயக்க மருந்து கொடுத்த தாய்-மகள் உள்ளிட்ட 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்பின் தெரியாத நபர்கள் கொடுக்கும் தின்பண்டங்களையோ அல்லது முகவரி கேட்பது போல நடித்து நெருங்கி வருபவர்களிடமோ மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாகத் தனியாகப் பயணிக்கும் பெண்களும், முதியவர்களும் அறிமுகம் இல்லாதவர்களிடம் எவ்வித உணவுப் பொருட்களையும் வாங்கி உண்ண வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…