இபிஎஸ் கோட்டையில் கைவைத்த விஜய்.. பனையூரில் இணையப்போகும் ‘அந்த’ 3 மாஜி அமைச்சர்கள்…. ஜூன் 22-ல் நடக்கப்போகும் மெகா சம்பவம்….!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் இதுவரை இல்லாத அளவிற்கான ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பம் அரங்கேறக் காத்துக் கொண்டிருக்கிறது. தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக்கட்சியினர் பெருந்திரளாக இணையும் மெகா இணைப்பு விழாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இந்த விழா நடைபெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கின்றன. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல்வர் விஜய்யின் முதல் பிறந்தநாள் என்பதால், தவெக தொண்டர்கள் மத்தியில் இந்த செய்தி பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விழாவில் அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிற கட்சிப் பிரமுகர்கள் முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவிருப்பது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் முன்னணி முகங்களாக வலம் வந்த முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், செல்லப்பாண்டியன் மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளனர். இவர்களுடன் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் மற்றும் அதிமுகவின் சென்னை முக்கியப் புள்ளியான மாவட்டச் செயலாளர் பாலகங்கா ஆகியோரும் தவெகவில் ஐக்கியமாக உள்ளதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே கடம்பூர் ராஜு உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெக பக்கம் சாய்ந்துவிட்ட சூழலில், அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து அதிமுகவின் பெரும் பட்டாளமே தவெகவை நோக்கி நகர்ந்து வருகிறது. முக்கியப் புள்ளிகளின் இந்த அடுத்தடுத்த கட்சித் தாவலால் அதிமுக விஸ்வாசிகளும், அக்கட்சியின் தலைமைப் பீடமும் கடுமையான அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்த இணைப்பு விழாவானது, தவெகவின் அரசியல் பலத்தை அடிமட்ட அளவில் மேலும் பலமடங்கு அதிகரிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதே நேரத்தில், தலைவர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் தவெக உறுதியாக உள்ளது. இதனால் சாலையில் பேனர்கள், கட்-அவுட்டுகள் வைப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக மக்கள் நலப்பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அமைச்சர் ஆனந்த் தொண்டர்களுக்குக் கடுமையான உத்தரவிட்டுள்ளார். ஆடம்பரங்களைத் தவிர்த்து, கட்சியின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் பனையூர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ள இந்த பிரம்மாண்ட மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

என்ன காரணமா இருக்கும்?… ஒரு போன் கால்… உச்சக்கட்ட சந்தேகம்… மனைவிக்கு தீ வைத்த கணவன்… வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…

12 minutes ago

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

20 minutes ago

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

44 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

52 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

58 minutes ago

வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர்… திடீரென அருகே வெடித்து சிதறிய பட்டாசுகள்… மிரண்டு போன ரசிகர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…

58 minutes ago