இபிஎஸ் கோட்டையில் விழும் அடுத்த விக்கெட்…. திமுகவுக்கு தாவும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்… அதிர்ச்சியில் எடப்பாடி….!

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கியப் புள்ளியுமான நிலோபர் கபில், விரைவில் திமுகவில் இணையப் போவதாக வெளியாகி இருக்கும் செய்திகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் மற்றும் கோஷ்டி மோதல்கள் காரணமாக நிலோபர் கபில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வந்ததாகவும், இதனால் அவர் மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கட்சியின் முக்கிய முடிவுகளில் தமக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததே இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி ஜோலார்பேட்டை அருகே பொன்னேரியில் திமுக சார்பில் பிரம்மாண்டமான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நிலோபர் கபில் தனது ஆதரவாளர்களுடன் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் ரகசியமாக நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் அதிமுகவின் ஒரு பலமான விக்கெட் சரியப் போவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், முன்னாள் அமைச்சரே வெளியேறுவது அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலோபர் கபில் போன்ற சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த ஒரு செல்வாக்கு மிக்க தலைவர் வெளியேறுவது, குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது அக்கட்சியின் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

6 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

6 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

7 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

7 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

7 மணத்தியாலங்கள் ago