தமிழக அரசியல் களம் தற்போது அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய கட்சிகளை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், திருச்சி வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்ட 5 முன்னாள் அமைச்சர்களும், 8 மாவட்ட செயலாளர்களும் தவெகவில் இணையவுள்ளனர். இவர்களுடன் வைரமுத்து, இளம்பை தமிழ்செல்வன், ஒரத்தநாடு சேகர், திருச்சி சீனிவாசன் போன்ற மாவட்ட செயலாளர்களும், முன்னாள் எம்எல்ஏக்களான மன்ராஜ், ராஜவர்மன், சதன் பிரபாகர், திருஞானசம்பந்தம், சுந்தர்ராஜன் ஆகியோரும் இன்று காலை தவெகவில் முறைப்படி தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.
இந்த பிரம்மாண்ட இணைப்பு விழாவிற்காக மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனது அரசியல் பலத்தையும் செல்வாக்கையும் நிரூபிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மாமல்லபுரத்தில் ஒரு மெகா ஷோவை அரங்கேற்றியுள்ளார். புதுக்கோட்டையிலிருந்து மட்டுமே சுமார் 200 பேருந்துகள் மற்றும் 500 கார்களில் 12,000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் சாரை சாரையாக மாமல்லபுரம் நோக்கி படையெடுத்து வந்துள்ளனர். இதனால் இன்று காலை 7 மணி முதலே மாமல்லபுரம் பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலுடன் மிகுந்த பரபரப்பாகக் காணப்படுகிறது. போலீசாரும் காலை முதலே போக்குவரத்தை சீர்செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுகவினர் தவெகவில் இணையும் இந்த நிகழ்வு அக்கட்சியினரையே மிரள வைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. வழக்கமாக திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளின் பொதுக்கூட்டங்களில் மட்டுமே தொண்டர்களுக்கு ஸ்நாக்ஸ் பேக் வழங்கப்படும்; தவெக போன்ற புதிய கட்சிகளின் கூட்டங்களில் தண்ணீர் பாட்டில் கொடுப்பதே அரிதாக இருந்த சூழலில், தற்போது இந்த இணைப்பு விழா நடைபெறும் அரங்கில் உள்ள ஒவ்வொரு இருக்கையிலும் தவெக துண்டு மற்றும் விஜய் புகைப்படத்துடன் கூடிய ஸ்நாக்ஸ் பைகள் வைக்கப்பட்டு அசத்தப்பட்டுள்ளது. தவெகவில் இணையும் அதிமுகவினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விஜயபாஸ்கரின் இந்த அதிரடி பவர் காட்டும் நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…