“இது புனிதமான இடம்” செருப்போட வராதீங்க.. தவெக அலுவலகத்தில் காலணிக்குத் தடை.. அதிருப்தியில் தொண்டர்கள்..!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், அக்கட்சியின் தேர்தல் தலைமை அலுவலகம் தொடர்பான செயல்பாடுகள் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் பல லட்சம் ரூபாய் செலவில், ஒரு பிரபல கலை இயக்குநரைக் கொண்டு இரண்டு நவீன குளிரூட்டப்பட்ட (AC) அறைகளுடன் இந்த அலுவலகம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் விஜய் நேரில் வந்து இந்த அலுவலகத்தைத் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வராததால் பல நாட்களாக இந்த அலுவலகம் பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடந்தது.

தேர்தல் நெருங்கி வருவதால், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு மாவட்டத் தலைவர் சிவா அண்மையில் அலுவலகத்தைத் திறந்து தேர்தல் பணிகளைத் தொடங்கினார். இருப்பினும், விஜய்க்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இடம் என்பதால் இதனை ‘புனிதமான இடம்’ எனக் குறிப்பிட்டு, “காலணி அணிந்து உள்ளே செல்ல அனுமதி இல்லை” என்ற அறிவிப்பு பலகை நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஒரு அரசியல் அலுவலகத்திற்குப் பொருத்தமற்றதாகக் கருதப்படுவதோடு, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

அலுவலகத்தின் உள்ளே மாவட்டத் தலைவர் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டும் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து பணிகளைக் கவனித்து வருகின்றனர். ஆனால், கட்சிப் பணிகளுக்காக வரும் மற்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வெயிலின் கொடுமையால் வேர்வையில் நனைந்தபடி, வரவேற்பு அறையில் அமர்ந்து பணியாற்றும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சி அலுவலகத்தைப் புனிதத் தலமாகச் சித்தரிப்பதும், பாகுபாடு காட்டும் விதமான இத்தகைய நடவடிக்கைகளும் அப்பகுதி மக்களிடையே தவெக மீதான எதிர்மறையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளன.

Soundarya

Recent Posts

“தோற்றால் தற்கொலை பண்ணிப்பேன்னு ஸ்டாலின்கிட்ட அழுதாரா துரை வைகோ?”…. வல்லம் பஷீர் கிளப்பிய புது வெடி….!

திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…

4 minutes ago

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கார்டுக்கும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே கிளம்புங்க…..!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…

14 minutes ago

ஒரு MLA-வுக்கு ரூ.35 கோடியா?…. தவெக பற்றி பொள்ளாச்சி ஜெயராமன் போட்ட பகிரங்கக் குண்டு… அரசியல் வட்டாரத்தில் பூகம்பம்….!

அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…

20 minutes ago

பரபரக்கும் தமிழக அரசியல்…. ‘தி மிசா மார்க்’ ரிலீஸ் தேதி பிக்ஸ்… உதயநிதி போட்ட ஸ்கெட்ச்…. விஜய்க்கு திமுகவின் அதிரடி பதிலடி….!

தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தி மிசா மார்க்' என்ற…

24 minutes ago

ஐயோ… 20 வருஷம் சிறை… கடைசியில தேநீர் கடையிலயா?… நிதாரி வழக்கு சுரேந்தர் கோலியின் விபரீத முடிவு… அதிர்ச்சி பின்னணி…!

நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில்…

1 மணத்தியாலம் ago