“பண்றதுல பன்னிட்டு தப்பு என் மேலயா”… இதெல்லாம் சரியா ஸ்டாலின் சார்… அன்னைக்கு போலீஸ் ஏன் எங்களை எச்சரிக்கல?… கரூரில் ஆவேசமடைந்த CM விஜய்…!

Spread the love

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் கரூர் மாவட்டத்திற்கு நேரில் சென்றுள்ளார். புதிய தொழில்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 உறுப்பினர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கும் முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்றார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாகக் கரூர் வந்தடைந்த முதல்வர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தன் ஆறுதலையும் அரசு உதவிகளையும் நேரடியாக வழங்கினார்.

அரசு விழாவில் உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆக்ரோஷமாகவும் பேசிய முதல்வர் விஜய், தன் அரசியல் பயணத்தில் பல வலிகளைத் தாண்டி வந்திருந்தாலும், கரூர் சம்பவம் தன் மனதை மிக ஆழமாகக் காயப்படுத்திய ஒன்று எனக் குறிப்பிட்டார். அன்றைய தினம் அரியலூர் கூட்டத்தை முடித்துவிட்டு பெரம்பலூர் செல்லவிருந்த போது போலீசார் எச்சரித்ததால் அக்கூட்டத்தை ரத்து செய்ததை சுட்டிக்காட்டிய அவர், கரூரில் அளவுக்கு அதிகமாகக் கூட்டம் இருந்தும் போலீசார் தங்களை முன்கூட்டியே எச்சரித்துத் தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அசம்பாவிதங்களைத் தடுக்கும் அதிகாரம் இருந்தும், போலீசார் தங்களை நெடுஞ்சாலையிலிருந்து நேரடியாகக் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கே அழைத்துச் சென்றது ஒரு திட்டமிடப்பட்ட “மிகப்பெரிய நாடகம்” என்றும், இதன் பின்னணியில் இருந்து உத்தரவிட்டது யார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

இத்துயரச் சம்பவத்தில் தன் அக்கா, தங்கைகளின் குழந்தைகளை இழந்த வலி ஒருபுறமிருக்க, சட்டசபையில் ஸ்டாலின் சார் பழியைத் தன் பக்கம் திருப்பிவிட்டு அரசியல் ஆதாயம் தேடுவதாக முதல்வர் விஜய் சாடினார். தான் மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவன் என்றும், தனக்கு என்றும் பணத்தை விட ஜனமே முக்கியம் என்றும் உறுதியளித்த அவர், பழி சுமத்தினால் தாம் மக்களை விட்டு ஓடிவிட மாட்டேன் எனக் கூறினார். மேலும், தங்களுக்கு இவ்வளவு பெரிய காயங்களைக் கொடுத்தவர்களுக்கு கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துவிட்டதாகவும், இனி அவர்களால் காலத்திற்கும் எழுந்திருக்க முடியாத அளவிற்கு ஒரு நிரந்தரமான சம்மட்டி அடியை மக்கள் கொடுக்க வேண்டும் என்றும், தற்போதைய மக்கள் அரசை மாடல் மாடலாகக் குறை சொல்பவர்களால் தங்களைப் போல உண்மைகளை வெளிப்படையாகப் பேச முடியாது என்றும் முதல்வர் விஜய் கரூரில் மிக ஆக்ரோஷமாகப் பேசி முடித்தார்.

Visaka

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

7 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

7 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

7 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

7 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

7 மணத்தியாலங்கள் ago